/* */

வாக்கு எண்ணிக்கை ஆலோசனைக் கூட்டம்

அரியலூரில், வாக்கு எண்ணிக்கை நாளன்று கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வாக்கு எண்ணிக்கை ஆலோசனைக் கூட்டம்
X

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-ஐ முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை நாளன்று கடைபிடிக்க வேண்டிய கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் த.ரத்னா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்ததாவது,

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 08.00 மணிக்கு துவங்க உள்ளது. அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு அரசு தொழிற்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 14 வாக்கு எண்ணும் மேசைகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, அமைக்கப்பட்டுள்ளது.

தபால் வாக்குகள் எண்ணுவதற்கான அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு நான்கு மேசைகளும், ஜெயங்கொண்டம் சட்மன்ற தொகுதிக்கு 6 மேசைகளும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு வேட்பாளரும் வாக்கு எண்ணும் மேசைகளுக்காக 14 முகவர்கள், தபால் வாக்குகள் எண்ணப்படும் மேசைகளுக்கு தனியாக முகவர், தேர்தல் நடத்தும் அலுவலர் மேசைக்கு ஒரு முகவர் என பங்கேற்க உள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங்கள் முழுமையாக கிருமி நாசினி மூலமாக வாக்கு எண்ணிக்கை முந்தைய நாள் சுத்தம் செய்யப்படும். மேலும், வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கவுள்ள வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கொரோனா தொற்று அல்லாதவர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மேலும், வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கவுள்ள மேற்காணும் நபர்கள் அனைவரும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் முககவசம், கையுறை ஆகியவற்றை கண்டிப்பாக அணிந்து வர வேண்டும்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து வேட்பாளர்களும், முகவர்களும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் முறையாக கடைபிடித்து, வாக்கு எண்ணும் பணி சுமூகமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் ஏழுமலை (அரியலூர்), அமர்நாத் (உடையார்பாளையம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) வீ.சி.ஹேமசந்த்காந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Updated On: 1 May 2021 2:34 AM GMT

Related News