/* */

11ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை துவக்கம்: அரியலூரில் 9,491 மாணவர்கள் பங்கேற்பு

அரியலூர் மாவட்டத்தில் நாளை 11-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 9,491 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்

HIGHLIGHTS

11ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை துவக்கம்: அரியலூரில் 9,491 மாணவர்கள் பங்கேற்பு
X

அரியலூர் மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 9,491 மாணவ, மாணவிகள் எழுத உள்ளதாக மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 9,491 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர் - அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தகவல்

தமிழ்நாடு முழுவதும் 11-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நாளைய தினம் 10.05.2022 தொடங்க உள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 87 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 4,660 மாணவர்களும், 4,831 மாணவிகளும் என ஆகமொத்தம் 9,491 மாணவ, மாணவிகள் தேர்வினை எழுத உள்ளனர்.

11-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை அரியலூர் கல்வி மாவட்டத்தில் 1,317 மாணவர்களும், 1,590 மாணவிகளும் என மொத்தம் 2,907 மாணவ, மாணவிகள் 12 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இதேபோன்று உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் 1,808 மாணவர்களும், 1,789 மாணவிகளும் என மொத்தம் 3,597 மாணவ, மாணவிகள் 13 தேர்வு மையங்களிலும், செந்துறை கல்வி மாவட்டத்தில் 1,535 மாணவர்களும், 1,452 மாணவிகளும் என மொத்தம் 2,987 மாணவ, மாணவிகள் 14 தேர்வு மையங்களிலும் என அரியலூர் மாவட்டத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 87 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 4,660 மாணவர்களும், 4,831 மாணவிகளும் என ஆகமொத்தம் 9,491 மாணவ, மாணவிகள் 39 தேர்வு மையங்களில் தேர்வினை எழுத உள்ளனர்.

தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் உரிய கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 9 May 2022 2:15 PM GMT

Related News