/* */

வாழும் கலை நிறுவனத்தை தோற்றுவித்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

சுதர்ஷன் க்ரியா என்பது வாழும் கலை நிறுவனப் பயிற்சி

HIGHLIGHTS

வாழும் கலை நிறுவனத்தை தோற்றுவித்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
X

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் 1956 ம் ஆண்டு மே 13 ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள பாபநாசத்தில் ஸ்ரீஸ்ரீவேங்கடரத்னம் என்ற மொழி வல்லுனருக்கும் விசாலாட்சி என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற குரு.அவர் ஆதி சங்கரர் பிறந்த நாளில் பிறந்ததால் அவருக்கு சங்கர் என்று பெற்றோர் பெயரிட்டனர். நான்கு வயதிலேயே பகவத் கீதை என்கிற இந்து புனித நூலை ஒப்பிக்கத் தெரிந்து வைத்திருந்தாராம். இளமைப் பருவத்திலேயே ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் வல்லமை பெற்றிருந்தார் என்றும் கருதப்படுகிறது. பதினேழு வயதில் முன்னிலை இயற்பியல் பட்டம் பெற்றுள்ளார்.

இவர் மகரிஷி மகேஷ் யோகியிடம் சீடராக இருந்து அவரது தலைமையில் வேத விற்பன்னர்களை பயிற்றுவித்து அவரது அன்புள்ள சீடராகவும் விளங்கியுள்ளார். பிற்காலத்தில் அவரது பெயரான ரவிசங்கருடன் ஸ்ரீஸ்ரீ என்கிற பெயரையும் சேர்த்துக்கொண்டார். ஏனெனில்,ரவிசங்கர் என்கிற சித்தார் வல்லுநர் தனது பெயரால் குரு பயன் பெறுவதாக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

1982 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் உள்ள ஷிமோகாவில் பத்ரா நதிக்கரையில் 10 நாள்கள் தனிமை மௌனத்திற்குப் பிறகு இவர் "சுதர்ஷன் க்ரியா" என்கிற ஒரு தாள லயமுள்ள மூச்சுப் பயிற்சியை உணர்ந்தறிந்தார். ஒரு நேர் காணலில் அவர் இந்த பயிற்சி தனக்கு ஒரு "பாடல் அல்லது உத்வேகம்" போல் தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார். பிறகு அவர் அதை மற்றவருக்கும் பயிற்றுவிக்கத் தொடங்கினார். அவர் சொல்கிறார்: "ஒவ்வொரு உணர்வும் மூச்சின் ஒவ்வொரு லயத்துடன் தொடர்புடையது. எனவே மூச்சை சமன் செய்வது துன்பத்தைக் குறைக்க உதவும்"

சங்கர் 1982 ஆம் ஆண்டு "வாழும் கலை" நிறுவனத்தைத் தொடங்கினார். தலாய்லாமா மற்றும் வேறு சிலருடன் இணைந்து சர்வதேச மனித மதிப்புகள் கழகத்தை தொடங்கினார். இதன் நோக்கம் "மனித சமுதாயத்தை ஒருமைப்படுத்தும் மதிப்புகளை அறிவதும் வளர்ப்பதுவுமே" ஆகும்.

சங்கர் மூச்சை உடம்பையும் மனதையும் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் வைத்துக் கொள்ள ஒரு சாதனமாகக் கருதுகிறார். அவர் தியானம் செய்வதுடன் மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுருத்துகிறார்.

சுதர்ஷன் க்ரியா என்பது வாழும் கலை நிறுவனப் பயிற்சிகளின் ஒரு முக்கிய அங்கமாகும். இது உடலில் ஆற்றலைப் புகுத்தி, உடல், மனம் மற்றும் உணர்வுகளின் இயற்கையான தாள லயங்களைச் சமன் செய்யக் கூடியதாகக் கருதப் படுகிறது. இதன் பலன்களைப் பற்றி பல்வேறு தனி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இதைத் தவிர வாழும் கலை நிறுவனம் தியானம் மற்றும் குழு சார்ந்த பயிற்சிகளையும் அளிக்கிறது. ஏழ்மை மிக்க கிராம மற்றும் நகரப் பகுதிகளிலும், சிறைச் சாலைகளிலும் கூட சில பயிற்சிகளை இலவசமாக அளிக்கிறது. வாழும் கலை நிறுவனம் பயிற்சிகள் அளிப்பதுடன், சேவைப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தமது சுதர்சன் கிரியா பயிற்சிக்குக் காப்புரிமை பெற்றுள்ளார்.ஆனால் பழமையான யோகா பயிற்சிகளை மூச்சுப் பயிற்சிகளுடன் இணைத்து ஓர் மாயவலை பின்னணியில் வணிகமாக்கியிருப்பதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர். தன்னார்வலர்களுடன் அவர் நடத்தும் சமூக மாநாடுகளும் அவரது ஆசிரமத்திற்கு வணிகப் பலன் வேண்டியே நடத்தப்படுவதாகவும் விமர்சனம் உண்டு.

அவரது வலைத்தளங்களிலும் பதிப்புகளிலும் உள்ள பல சான்றுகள் இல்லாமலும் சரிபார்க்க இயலாததாகவும் உள்ளன. எடுத்துக்காட்டா ,கொடுக்கப்பட்ட ஓர் பதிப்பில் இளைஞர் விழிப்புணர்ச்சி மாநாடு (Youth Empowerment Seminar) பத்து ஜெர்மானிய பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இதனை ஆங்கில இதழ் ரீடர்ஸ் டைஜஸ்ட் தம்போக்கில் ஐந்து பல்கலைக்கழகங்களில் சரிபார்த்த போது, அவை கட்டாயமாக இல்லாமல் கல்வித் திட்டத்திலேயே இல்லாதிருந்தது தெரியவந்தது. டென்னிஸ்,உடற்பயிற்சி போன்ற மனமகிழ் செயல்பாடுகளில் ஒன்றாக விருப்பத் தேர்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது

Updated On: 13 May 2021 2:37 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!