/* */

ராணுவம், தீயணைப்புத் துறையினருக்கு தெற்குப்பார்த்த வீடு சிறப்பு..! எப்பிடின்னு பாருங்க..!

south facing house vastu plan in tamil-தெற்குப்பார்த்த வீட்டில் வசிப்பது அல்லது கட்டுவது நல்லதா..? வாங்க தெரிஞ்சுக்குவோம்.

HIGHLIGHTS

ராணுவம், தீயணைப்புத் துறையினருக்கு தெற்குப்பார்த்த வீடு சிறப்பு..! எப்பிடின்னு பாருங்க..!
X

south facing house vastu plan in tamil-தெற்குப்பார்த்த வீடு (கோப்பு படம்)

south facing house vastu plan in tamil-வீடு என்பது வெறும் செங்கற்களும் சிமிண்டும் கலந்த கலவை மட்டும் அல்ல. அது அன்பை சுமக்கும் கூடு. குடும்பத்தினர் மகிழ்ச்சியாக வாழும் இடம். அந்த இடம் எப்படி அமையவேண்டும் என்பதை ஜோதிட சாஸ்திரங்கள் வரையறை செய்து வைத்துள்ளன. குறிப்பாக வாஸ்து சாஸ்திரம் மிகத்தெளிவாக வரையறை செய்துள்ளது. எந்த ராசிக்கு எப்படி? எந்த திசையில் வீடு அமையவேண்டும்? அதன் பலன்கள் என்ன போன்ற விபரங்களை தெளிவுபடுத்தியுள்ளது.

இன்று அனைவருமே புது வீட்டை கட்டும் போது வாஸ்து சாஸ்திர விதிமுறைகளை பின்பற்றியே கட்டுகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் "தென் திசை" நோக்கி வீடுகளின் தலைவாயில்களை அமைப்பதிலும், அத்திசை நோக்கி இருக்கும் வீடுகளில் வசிப்பதற்கும் தயக்கம் காட்டுகின்றனர். வாஸ்து சாஸ்திரப்படி தென் திசை நோக்கி கட்டப்படும் வீடுகளால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை அறிவோம் வாருங்கள்.

3 ஆசீர்வாதங்கள்

தெற்கு திசை என்பது 'அஷ்டதிக்' எனப்படுகிறது. பாலகர்களில் எம தர்மன் வீற்றிருக்கும் திசையாகும். நவகிரகங்களில் போர்க்கிரகமான "செவ்வாய்" பகவானுக்குரிய திசையாகும். நீத்தார் கடன் எனப்படும் பித்ருக்கள் அல்லது முன்னோர்கள் வசிக்கும் பித்ரு லோகம் தென்திசையில் இருப்பதாக ஐதீகம்.

எனவே, இத்திசையை நோக்கிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு ஆயுளை தீர்மானிக்கும் எமன், பூமிகாரகன் மற்றும் நோய்களிலிருந்து காக்கும் சக்தி கொண்ட செவ்வாய், எப்போதும் நமது மேன்மையை விரும்பும் மறைந்த நமது முன்னோர்கள் ஆகிய மூன்று சக்திகளின் ஆசிர்வாதங்களும் தென்திசை நோக்கிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு கிடைக்கிறது.

பொதுவாக வாஸ்து குறித்து அறியாதவர்கள் கூட தெற்கு திசை பார்த்து வீட்டின் தலைவாயிலை அமைப்பதையோ அல்லது அத்தகைய வீடுகளில் வசிப்பதையோ தவிர்க்கின்றனர். தெற்கு திசை நோக்கிய வீடுகளின் தலை வாயிலை அமைப்பதாலும், அந்த திசையை நோக்கிய வீடுகளில் குடியிருப்பதாலும் எம தர்மனின் ஆசிகள் கிடைத்து வசிப்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும். திடீர் விபத்துகள், தீராத நோய்கள் போன்றவை ஏற்படாது. எதிரிகள் கூட உருவாக்கமுடியாது.

ஆயுள் கூடும்

ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை, மருத்துவத்துறை ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் தெற்கு திசையை பார்த்தவாறு வீடுகளின் தலைவாயில்கள் அமைத்து கொள்வதும், தென் திசை பார்த்தவாறு இருக்கும் வீடுகளில் வசிப்பதும் நன்மைகளை ஏற்படுத்தும். செவ்வாய் பகவானுக்குரிய திசையாக தென் திசை இருப்பதால் இத்திசை நோக்கிய வீடுகளில் வசிப்பவர்கள் எதற்கும் அஞ்சாத தைரியம் மிக்கவர்களாகவும், நீண்ட காலம் பாதிக்கும் நோய்கள் ஏதும் பாதிக்காத வகையிலும் வாழ்வார்கள்.

எந்த ராசிக்கு சிறப்பு ?

south facing house vastu plan in tamil-மேஷம், விருச்சிகம் மற்றும் செவ்வாய் பகவான் உச்சமடையும் ராசியான மகரம் ராசிக்காரர்களும் தென்திசை பார்த்தவாறு வீடுகளின் தலைவாயில்களை அமைத்து கொள்வது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். ஜாதகத்தில் செவ்வாய் 6, 8, 12 ம் இடங்களில் இருப்பவர்கள் தென்திசை தலைவாயிலை அமைப்பதையும், அத்திசை நோக்கிய வீடுகளில் வசிப்பதையும் தவிர்ப்பது நல்லது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 Aug 2022 11:44 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!