/* */

Tirupati Temple- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழா; நாளை கொடியேற்றம்

Tirupati Temple- திருப்பதி, திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையான் கோவிலில், பிரமோற்சவ விழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

HIGHLIGHTS

Tirupati Temple- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழா; நாளை கொடியேற்றம்
X

Tirupati Temple- திருப்பதி ஏழுமலையான் கோவில் (கோப்பு படம்)

Tirupati Temple, Brahmotsava ceremony, Flag hoisting- திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதில் முதலில் வருவது (இந்த மாதம்) வருடாந்திர பிரம்மோற்சவ விழா, அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ம் தேதியில் இருந்து 23-ம் தேதி வரை நடப்பது நவராத்திரி பிரம்மோற்சவ விழா ஆகும்.


நவராத்திரி பிரம்மோற்சவ விழா 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். நாளை (திங்கட்கிழமை) முதல் 26-ம் தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) மாலை 3.30 மணியில் இருந்து 5.30 மணி வரை தங்கத் திருச்சி உற்சவம், மாலை 6.15 மணியில் இருந்து 6.30 மணி வரை மீன லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது. இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை பெரியசேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.


வருகிற 19-ம் தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சின்ன சேஷ வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை ஹம்ச வாகன வீதி உலா. 20-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சிம்ம வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா. 21-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடைபெற உள்ளது.


வரும் 22-ம் தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை பல்லக்கு உற்சவத்தில் எழுந்தருளும் உற்சவர் மலையப்பசாமி மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வருகிறார். இரவு 7 மணிக்கு பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருட சேவை தொடங்குகிறது. 23-ம் தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை தங்கத்தேரோட்டம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை யானை வாகன வீதிஉலா. 24-ம் தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சூரிய பிரபை வாகன வீதி உலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடைபெற உள்ளது.


வரும் 25-ம் தேதி காலை 6.55 மணியளவில் தேர்த்திருவிழா, இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை குதிரை வாகன வீதிஉலா. 26-ம் தேதி அதிகாலை 3 மணியில் இருந்து காலை 6 மணி வரை பல்லக்கு உற்சவம் மற்றும் திருச்சி உற்சவம், காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை திருமஞ்சனம் மற்றும் சக்கர ஸ்நானம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை கொடியிறக்கம் நடக்கிறது.

இதோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் இணைந்தும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

Updated On: 17 Sep 2023 5:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  4. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  5. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  6. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  7. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  8. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  9. ஈரோடு
    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!