/* */

அமேதியில் மீண்டும் ராகுல்காந்தி!? என்ன செய்யப்போகுது காங்கிரஸ்?

அமேதி தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

அமேதியில் மீண்டும் ராகுல்காந்தி!? என்ன செய்யப்போகுது காங்கிரஸ்?
X

அமேதி தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற நிலையில், மீண்டும் அமேதியில் போட்டியிடுவாரா என எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்து வந்த நிலையில் இந்த முறை நிச்சயமாக போட்டியிட்டு அந்த தொகுதியை திரும்ப பெறுவார் என்று காங்கிரஸ் தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

கோவாவில் லோக்சபா தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி பரப்புரையில் தீவிரம் காட்டி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 27) சான்கோலேயில் ஒரு பேரணியில் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

கோவா மாநில பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ள தகவலின்படி, பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த பேரணியில் சுமார் 50,000 பேர் கலந்து கொண்டு வெற்றியடைய செய்வார்கள் என பாஜக தேசிய தலைமை எதிர்பார்க்கிறது. மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக இந்தியா முழுக்க நடைபெற்று வரும் நிலையில், தற்போது 2 கட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளது.

முதல் கட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. அடுத்த கட்டத்தில் 89 மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் ஏப்ரல் 26ம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. இதில் கேரளா முழுவதுமாக பங்கேற்றது. அடுத்தக்கட்டமாக 3வது கட்ட தேர்தல் வரும் மே 7ம் தேதி நடைபெற இருக்கிறது.

லோக்சபா தேர்தலின் மூன்றாம் கட்டமாக கோவா மாநிலத்தில் மே 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டத்திற்குப் பிறகு மாநிலத்தில் உள்ள இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜகவின் வாக்கு எண்ணிக்கையும், முன்னிலையும் அதிகரிக்கும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். இதனால் பாஜக தொண்டர்கள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் அமைந்து உள்ள அமேதி மற்றும் ரேபரேலி உள்ளிட்ட மீதமுள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான தனது கட்சி வேட்பாளர்களை இன்று சனிக்கிழமை மாலை அறிவிக்கவுள்ளது காங்கிரஸ் கட்சி. அக்கட்சியின் உயர்மட்ட தலைமைக் குழு இதுகுறித்து விவாதித்து இறுதி செய்யும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான மீதமுள்ள இடங்கள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு (சிஇசி) கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் சனிக்கிழமை மாலை கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர். அநேகமாக இந்த இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் போட்டியிட்டு பாஜகவுக்கு போதிய எதிர்ப்பை காண்பிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


உத்திரப்பிரதேசத்தில், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 62 தொகுதிகளிலும், திரிணாமூல் காங்கிரஸ் 1 தொகுதியிலும் போட்டியிடுகிறது. அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். ராகுல் இந்த தொகுதியில் அவரிடம்தான் கடந்த முறை தோல்வியடைந்தார். இம்முறை அதற்கு பழி தீர்க்கும் வகையில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்திதான் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சரும் அமேதி பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இரானி பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், “வயநாடு வாக்குப்பதிவுக்குப் பிறகு காங்கிரஸ் வேட்பாளர் இங்கு வருவார் என்று எங்களிடம் கூறப்பட்டது, ஆனால் முதலில் அவர் ராமர் கோயிலுக்குச் செல்வார். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பை நிராகரித்த அவர்கள், இப்போது கோவிலுக்குச் செல்வார்கள், இதனால் தங்களுக்கு வாக்குகள் கிடைக்கலாம், அதாவது இப்போது கடவுளையும் காட்டிக் கொடுக்கப் போவார்கள் என்று கிண்டலாக பேசியுள்ளார்.

Updated On: 27 April 2024 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  2. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  4. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  6. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  7. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  8. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  10. ஈரோடு
    ஈரோடு வழியாக வந்த ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த அரசு ஊழியர்