/* */

திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் 'டாடா' ?முரண்பாடு என அழகிரி ஒப்புதல்

பேரறிவாளன் விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் இடையே கருத்து மோதல் வெடித்து வரும் நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே, பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் டாடா ?முரண்பாடு என அழகிரி ஒப்புதல்
X

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதை தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் வரவேற்று கொண்டாடி வருகின்றன. அதே நேரம், கொலை வழக்கில் தண்டனை பெற்றவரின் விடுதலையை, தியாகியைப் போல் கொண்டாடுவதா என்று இன்னொரு தரப்பில் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கும் பேரறிவாளன் விவகாரத்தில் மனத்தாங்கல் உள்ளது. நீதிமன்றத் தீர்ப்பை விமர்சனம் செய்யாத தமிழக காங்கிரஸ், தனது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் மவுனப் போராட்டம் நடத்தியது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளியை கொண்டாடும் திமுக அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

பேரறிவாளன் விவகாரத்தில் திமுகவினர், காங்கிரஸ் கட்சியை வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இதற்கு காங்கிரஸ் தரப்பில் நிர்வாகிகள், சமூக வலைதளங்களில் பதிலடி கொடுக்க, இரு கட்சியினர் இடையே கருத்து மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி நினைவிடத்தில், 31ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ராஜிவ்காந்தி இறந்தபோது கண்ணீர், ஆறாக போனது. தற்போது கொலையாளிகளை விடுதலை செய்ததை திருவிழாவாக கொண்டாடுவது பார்க்கும்போது இதயத்தில் இருந்து ரத்தக் கண்ணீர் வருகிறது. எங்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை"என்றார்.

பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடுவதால், திமுக கூட்டணியில் இருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு அழகிரி பதில் அளிக்கையில், "தேர்தலுக்கு முன்பே ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்ய வேண்டும் என திமுக சொன்னது. தெரிந்துதான் கூட்டணியில் இருந்தோம். எனவே கூட்டணி வேறு, கொள்கை வேறு. அவர்கள் கொள்கையை அவர்கள் கூறுகிறார்கள். எங்கள் கொள்கையை நாங்கள் கூறுகிறோம்" என்றார்.

பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் கட்டியணைத்தது பற்றி, நாங்கள் சொல்ல எதுவும் இல்லை. பேரறிவாளனை கட்டியணைத்தாலும், முத்தம் கொடுத்தாலும் எங்களுக்கு எதுவும் இல்லை. தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. இது தெரிந்து தான் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. தி.மு.க. உடன் கூட்டணியை மேலிடம் தான் முடிவு செய்தது என்று, கே.எஸ். அழகிரி மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, தி.மு.க துணை பொதுச்செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன், காங்கிரஸ் தலைவர்களை விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது பதிவில், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற தயாராகும் சகுனங்கள் கண்முன்!' என்று குறிப்பிட்டுள்ளார். இது, தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கு அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 22 May 2022 2:43 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!