/* */

அதென்னங்க ஊசலாடும் மனசு..அலைபாயுதே போல..! இது பெண்களுக்கு மட்டும்..!

Mood in Tamil Meaning-ஊசலாடும் மனநிலை என்பது என்ன? அது பெண்களுக்கு ஏன் ஏற்படுகிறது என்பதை தெரிஞ்சுக்கங்க.

HIGHLIGHTS

Mood in Tamil Meaning- பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவோ, மாதவிடாய் முடிந்த 15 நாட்களிலோ அல்லது பிரசவ காலத்தில் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நிலையான மனநிலை அவர்களுக்கு இருக்காது. அதை மூட் ஸ்விங்ஸ் என்பார்கள். அதாவது ஊசலாடும் மனம் என்று தமிழில் கூறலாம். இந்த ஊசலாடும் மனம் குறித்து பலருக்கும் தெரியாது.

எதனால் ஊசலாடும் மனநிலை?

பெண்களுக்கு எதனால் இந்த ஊசலாடும் மனநிலை ஏற்படுகிறது என்பதை அந்த காலகட்டங்களில் உடன் இருப்பவர்கள் அதாவது கணவன் அவர்களின் மனநிலையை நன்றாக புரிந்து நடப்பது அவசியம்.

ஹார்மோன் சுரப்பால்

ஊசலாடும் மனம் என்பது பெண்களின் உடலில் திடீரென அதிகரிக்கும் ஹார்மோன் சுரப்பின் காரணத்தால் ஏற்படுகிறது. இது ஒரு கோளாறோ, பிரச்னையோ அல்ல. பெண்களின் உடல் இயக்கத்தில் (மெக்கானிசம்) ஏற்படும் ஒரு இயல்பான செயல்பாடு.

அழுவார்கள்

ஊசலாடும் மனம் ஏற்படும் போது சில பெண்கள் அழுவார்கள். யாரும் இல்லாமல் தனிமையில் விடப்பட்டதாக உணர்வார்கள். இதை வெளிப்படுத்தவும் செய்வார்கள். இது அவர்கள் வேண்டுமென்றே செய்வது அல்ல. எனவே, இதற்காக கணவன் அவர்களிடம் கோபம் கொள்ளக் கூடாது. மாறாக அவர்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாக உடன் இருப்பது நல்லது.

கோபம் கொள்வார்கள்

சில பெண்கள் ஊசலாடும் மனநிலையில் அந்த குறிப்பிட்ட நாட்களை திட்டவும் செய்வார்கள். காரணமே இல்லாமல் அவர்களுக்கு அதிக கோபம் வரும். அதை ஆண்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

புலம்பல் நிலை

அவசியமே இல்லாமல் ஏதாவது புலம்பிக்கொண்டே இருப்பார்கள். ஊசலாடும் மனநிலையில் உள்ள நாட்களில் சங்கடமாக உணர்வார்கள், அலுப்பாக இருப்பது போல இருக்கும். இதன் வெளிப்பாடே புலம்புவது. இது பொதுவாக எல்லாப் பெண்களிடம் காணப்படும் அடிப்படை விஷயங்கள். இதை தவறாக எண்ணுவதோ, அவர்கள் மீது எரிச்சல் கொள்வதோ கூடாது.

அருகில் மறந்து இனிமையாக பேசுதல்

இவ்வாறான அறிகுறிகளில் அவர்கள் இருந்தால் ஊசலாடும் மனநிலையில் இருக்கிறார் என்பதை உணர்ந்து அவர்களுக்கு ஆதரவாக நடப்பது அவசியம். இன்னும் சொல்லப்போனால், கணவன் அவர் அருகில் அமர்ந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தாலே போதும் அவர்கள் பல சிக்கல்களை மறந்துவிடுவார்கள். அதனால், அதைப்போன்ற நேரங்களில் கணவன் மனைவியுடன் நேரத்தை செலவிடுவது நல்லது.

உதவுதல்

இதைப்போன்ற நேரங்களில் முடிந்த வரை அவருக்கு வீட்டு வேலைகளில் சின்னச் சின்ன உதவிகள் செய்யலாம்.அவர்களின் கோபம் அலலது அந்த ஊசலாடும் மனநிலையை மாற்றுவதற்கு டீ, காபி கூட போட்டுக் கொடுக்கலாம். முடிந்தால் சமையல் வேலையில் கூட இறங்கலாம்.

பிடிக்காததை தவிர்த்தல்

ஊசலாடும் மனநிலை நாட்களின் போது மனைவிக்குப் பிடிக்காத எந்த விஷயங்களையும் கணவன் தவிர்த்துவிடலாம். ஏனெனில் ஒருவேளை அவர்கள் சீற்றம் கொண்டால், அதற்கான முழுமையான பலனை அனுபவிப்பதும் கணவராகத்தான் இருப்பார்.

நல்ல ரெஸ்ட் தேவை

ஊசலாடும் மனநிலையில் இருக்கும்போது அதிகமான வேலையை அவர்கள் மீது சுமத்தக்கூடாது. அவர்களின் நிலை அறிந்து அவர்களை கணவனே நன்றாக ஓய்வெடுக்க கூறவேண்டும். நல்ல ஓய்வெடுத்து இருந்தாலே அவர்களின் மனநிலையில் அமைதி நிலை ஏற்படும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 March 2024 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?