/* */

இருமல் 'பை..பை' சொல்லி ஓடும் மருந்து..! : நம்ம பாட்டி சொல்றாங்க..!

Irumal Sariyaga Tips in Tamil-இருமல் தூக்கத்தைக் கெடுக்கும் பொல்லாத ஒன்று. அதை தீர்ப்பதற்கு நம்ம பாட்டி வைத்தியமே போதுங்க.

HIGHLIGHTS

Irumal Sariyaga Tips in Tamil
X

Irumal Sariyaga Tips in Tamil

Irumal Sariyaga Tips in Tamil-இருமல் வந்தால் தூக்கம் கெட்டுப்போகும். அட ஆமாங்க.. சொல்லிவச்ச மாதிரி இரவில்தான் இந்த இருமல் வரும். நாமளும் 'லொக்கு லொக்கு'ன்னு இருமிக்கொண்டே வீட்டில் உள்ள மற்றவர்களையும் சேர்த்து தூங்கவிடாமல் செய்வோம். எல்லோரையும் சேர்த்து கெடுப்பதில் இருமலுக்கு அவ்ளோ சந்தோஷம்.

ஜலதோஷம் வந்தாலே சந்தோஷம் போயிடும். இந்த ஜலதோஷத்தின் தங்கச்சிதான் இருமல். ஆமாங்க..ஜலதோஷம் வந்தாலே இருமலும் கூடப்பொறந்த மாதிரி ஒட்டிக்கொள்ளும். சரி..சரி..விஷயத்துக்கு வருவோம். இருமலுக்கு நம்ம பாட்டி சொல்ற சின்ன சின்ன டிப்ஸ் பாருங்க.

  • நான்கு முதல் ஐந்து பல் பூண்டை நெய்யில் நன்கு வதக்க வேண்டும். அதன் பிறகு அதை நன்கு நசுக்கி, சூப்பிலோ அல்லது குழம்பிலோ போட்டு சூடு ஆறுவதற்குள் சாப்பிட வேண்டும். இருமல் குணமாக இது ஒரு நல்ல தீர்வாகும்.
  • வறட்டு இருமல் சரியாக கருவேல மர கொழுந்தினை எடுத்து அதில் உள்ள சாறை நன்குபிழிந்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் சரியாகும்.
  • 5 கிராம் சித்தரத்தையுடன் உலர்ந்த திராட்சை சேர்த்து கசாயம் செய்து குடித்தால் இருமல் குணமாகும்.
  • இருமல் குணமாக, முருங்கைக் கீரையில் சாறு பிழிந்து அதனுடன் தேன் மற்றும் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து தொண்டை பகுதியில் தடவலாம். இதன் மூலம் தொண்டை வலியும் குறையும்.

குறிப்பு: சுண்ணாம்பை அதிகம் சேர்க்கக்கூடாது.


  • ஒரு டம்ளர் வெண்ணீரை எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் தேன், சிறிதளவு மிளகு போட்டு 10 நிமிடங்கள் மூடி வைத்திருந்து பின்னர் அதை குடிக்கவும். இதன் மூலம் இருமல், சளி குணமாகும்.
  • சிறிதளவு பனங்கற்கண்டை வாயில் போட்டு கற்கண்டு சாறு தொண்டையில் படும்படி விழுங்கினால் இருமல் சரியாகும்.
  • பால் - முட்டை - பாலை அடுப்பில் வைத்து நன்றாக பொங்கும்போது முட்டையின் மஞ்சள் கருவை அதில் போட்டு சில நிமிடங்களுக்கு கலக்கிய பின்னர் அதை இறக்கி சிறிது ஆறவிடவேண்டும். பால் வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் அதில் தேன் கலந்து பருகி வந்தால் வறட்டு இருமல்...போங்கப்பா..நீங்களும் ,உங்க இருமலும் என்று வராமலேயே போய்விடும். தினமும் இரவு உணவு முடிந்ததும் இந்த பாலை குடிக்க வேண்டும்.
  • கொள்ளு சூப்- சிறிதளவு கொள்ளு எடுத்து வாணலியில் பொன்னிறமாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். அதனுடன் மிளகு, புண்டு மற்றும் சுக்கு மூன்றையும் பொடி செய்து கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீரில் இருவித பொடிகளையும் சேர்த்து சிறிது உப்பு சோ்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இரண்டு நாள் தொடர்ந்து இதை சற்று சூடாக டீ குடிப்பதுபோல குடித்து வந்தால் எந்த இருமலும் வந்த வழி அஞ்சி ஓடும்.
  • புதினா - வறட்டு இருமலுக்கு புதினா ஒரு அருமருந்தாகும். புதினாவை துவையலாகவோ அல்லது சூப் செய்தோ சாப்பிடுவதால் வறட்டு இருமலில் இருந்து எளிதில் விடுபடலாம்.
  • இஞ்சி- இருமல் உடனே குணமாக வேண்டுமா? சிறிய இஞ்சி துண்டு ஒன்றில் சிறிதளவு உப்பை தூவி அதோடு துளசி இலை சேர்த்து மென்றால் போதும். இருமல் பை சொல்லி ஓடிவிடும்.

மேலே உள்ள குறிப்புகளை ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 18 April 2024 9:45 AM GMT

Related News