/* */

ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கும் மருத்துவ குணம் கொண்ட கானாங்கெளுத்தி மீன்.....

mackerel fish in tamil - கானாங்கெளுத்தி மீன்கள் சாப்பிடுவதால் இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம்.

HIGHLIGHTS

ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கும் மருத்துவ குணம் கொண்ட கானாங்கெளுத்தி மீன்.....
X

கானாங்கெளுத்தி மீன்கள்

mackerel fish in tamil - கானாங்கெளுத்தி மீன்கள் சாப்பிடுவதால் இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம்.

உலகம் முழுவதும் கடல், ஏரி, குளங்கள், கிணறு, குட்டைகள், ஆறுகள் என பல்வேறு மீன்கள் உள்ளன. அதேபோல் மீன் உணவுகளை விரும்பி சாப்பிடும் உணவுப் பிரியர்களும் ஏராளம் என்று கூறலாம். ஏனென்றால் இதில் ஏராளமான புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் அசைவப் பிரியர்களும் பெரும்பாலும் மீன் உணவுகளையே விரும்புகின்றனர். மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால்ல, இந்த மீன்களை வாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் இதய நோய்களைத் தடுத்துவிடுமாம்.

அப்படி விரும்பி உண்ணுகின்ற மீன் வகைகளில் தற்போது கானாங்கெளுத்தி மீனையும், அவற்றின் நன்மைகளையும் தற்போது பார்ப்போம்.

கானாங்கெளுத்தி மீன் பண்டைய ரோமானியர்களின் மிகச்சிறந்த உணவாக இருந்து வந்துள்ளது. அவர்களின் கால கட்டத்தில் இறைச்சிகளை விட, கானாங்கெளுத்தி மீன்கள் தான் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால் ரோமானியர்கள் பலர் கானாங்கெளுத்தி மீன்களை குளங்களில் இனப்பெருக்கம் செய்ய முயற்சி செய்தனர். இதற்காகவே லூசியஸ் மொரேனா என்பவர் மீன்களுக்காக ஓரு சிறந்த குளம் ஒன்றை கட்டியிருந்தது தனி வரலாறு.

கானாங்கெளுத்தி மீன்கள் இருப்பாரை, கருமூஞ்சிப்பாரை, ஒட்டகப்பாரை, மொசிங்கிப்பாறை, ஒட்டாம்பாரை, நண்ணைப்பாரை, நாமப்பாறை, பில்லிப்பாரை, தங்கப்பாரை, செம்பாரை, வரிப்பாரை, மண்டைக்காறல், சுதுப்புநாங்காறல், கொமாரப்பாறை, கருக்காப்பாரை, கண்ணிப்பாரை மற்றும் குளும்பாறை என 10 வகைகளாக உள்ளன.

கானாங்கெளுத்தி மீன் நன்மைகள்:

உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகம் உள்ளவர்கள், இந்த மீனை வாரம் ஒருமுறை உட்கொள்வது நல்லது.

இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், புரோட்டீன் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.இதய நோய்களைத் தடுக்கும்

மோனோ சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் மட்டுமின்றி, சாச்சுரேட்டட் கொழுப்புகள் குறைவாக உள்ளது.

இம்மீனை அடிக்கடி உட்கொண்டு வர, இதய பிரச்னைகளான பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு, மாரடைப்பு போன்றவை வரும் வாய்ப்பு குறையும்.

நீரிழிவு நோய் அபாயம் குறையும் கானாங்கெளுத்தி மீனில் வளமான அளவில் நல்ல கொழுப்புகளான மோனோ-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.

ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும் நீங்கள் அசைவ பிரியராக இருந்து, உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் கானாங்கெளுத்தி மீனை அடிக்கடி சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இச்சத்து ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.

கானாங்கெளுத்தியில் மூட்டு பிரச்னைகளைத் தடுக்கும் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில் அடிக்கடி உட்கொண்டு வர, மூட்டு பிரச்னைகள் வருவது தடுக்கப்படும்.

மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றால் கஷ்டப்படுவது குறைவாகும். மேலும் இதில் உள்ள DHA அல்சைமர் அல்லது பர்கின்சன் நோயின் தாக்குதலைத் தடுக்கும். குடல் புற்றுநோய் கானாங்கெளுத்தியில் மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத வைட்டமின் டி அதிகம் உள்ளது. இதனைப் புற்றுநோய் உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால், வாழ்நாளின் அளவை நீட்டிக்கலாம். ஆய்வு ஒன்றிலும் குடல் புற்றுநோயுடன் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் கானாங்கெளுத்தியை உட்கொண்டால், வாழும் நாளை அதிகரிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Updated On: 21 Dec 2022 1:08 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  2. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  5. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  6. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  7. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  8. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  9. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  10. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...