/* */

Dragon fruit in tamil-டிராகன் பழம் புற்றுநோயை தடுக்குமாம்..! தெரிஞ்சுக்கங்க..!

டிராகன் என்றால் பறக்கும் பாம்பு போன்ற ஒரு உருவம் கொண்ட விலங்கு. அந்த அமைப்பை கொண்டிருப்பதால் இதற்கு டிராகன் பழம் என்று பெயர் வந்துள்ளது.

HIGHLIGHTS

Dragon fruit in tamil-டிராகன் பழம் புற்றுநோயை தடுக்குமாம்..! தெரிஞ்சுக்கங்க..!
X

dragon fruit in tamil-டிராகன் பழம் சாப்பிடும் பெண் (கோப்பு படம்)

Dragon fruit in tamil

பொதுவாகவே நாம் டிராகன் ஏன்னு பெயரை கார்ட்டூன் படங்களிலும் கதைகளிலும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் டிராகன் பழம் குறித்து அறிந்திருக்கமாட்டோம். இன்று இந்த கட்டுரை மூலமாக டிராகன் பழத்தைப் பற்றி அறிந்துகொள்வோம் வாங்க.

டிராகன் பழம் தமிழில் தறுகண்பழம், அகிப்பழம் மற்றும் விருத்திரப்பழம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இது தர்பூசணி மற்றும் கிவி பழங்களின் சுவையைப் போல இருக்கும்.


டிராகன் பழம் உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளாக அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகள் இருந்து வந்தன. தற்போது அனைத்து உலக நாடுகளிலும் டிராகன் பயிரிடப்படுகிறது. டிராகன் பழம் ஆரோக்யத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும் பழ வகைகளில் ஒன்றாக விளங்குகிறது.

Dragon fruit in tamil

இதில் கால்சியம், வைட்டமின் பி3, இரும்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் பி1, பாஸ்பரஸ், வைட்டமின் பி2, வைட்டமின் சி5 போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க டிராகன் பழம் துணை புரிகின்றது.

டிராகன் பழத்தின் நன்மைகள்

உடல் எடையை குறையும்

டிராகன் பழத்தை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்கலாம். டிராகன் பழத்தை உட்கொள்வதன் மூலம் புரதச்சத்து அதிகம் கிடைக்கிறது. இதனை உட்கொள்வதினால் உடல் எடை அதிகரிக்காது. சாலட்டில் டிராகன் பழத்தை சேர்த்து உட்கொள்ளலாம்.


ஆஸ்துமா தொல்லைக்கு

ஆஸ்துமா மற்றும் இருமல் போன்ற செவிப்புலன் பிரச்னைகள் ஆபத்தானவை ஆகும். மேலும் இவை நமது அன்றாட செயல்பாடுகளை பாதிக்கிறது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை எடுப்பது அவசியம் ஆகும். டிராகன் பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது ஆஸ்துமா நோய்க்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு உணவு பொருளாகும்.

Dragon fruit in tamil

புற்றுநோய் தடுக்க

டிராகன் பழத்தில் ஃபைபர், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி, பி 2 மற்றும் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவும் வேறுசில கூறுகளும் உள்ளன. இதனால், புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவும்.

முடி உதிர்வைத் தடுக்கும்

டிராகன் பழத்தை சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வதைத் தடுக்க முடியும். இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை முடி வேர்களை பலப்படுத்துகிறது. மேலும் முடி உதிர்வதைத் தடுக்கிறது.


மலச்சிக்கலைப் போக்க

மலச்சிக்கல் ஏற்பட்டால் மலம் கடினமாகவும் திடமாகவும் இருக்கிறது. அதனால் மலம் கழிக்கமுடியாமல் அவதியுறும் நிலை ஏற்படும். டிராகன் பழத்தில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இதை உட்கொள்வதால் அது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. வளர்சிதை மாற்ற அமைப்பை மேம்படுத்தவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.

சருமப் பிரச்சினைக்கு

Dragon fruit in tamil

பெண்கள் தங்கள் சருமத்தை அழகாக வைத்துக்கொள்வதற்கு பல்வேறு வகையான க்ரீம்கள் போன்றவைகளை பயன்படுத்துகிறார்கள். டிராகன் பழத்தை உட்கொள்வதன் மூலம் சருமத்தை சீராக வைத்துக்கொள்ளலாம். இதில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளது. இது முகப் பருக்களை நீக்குகிறது. மேலும், சருமத்தை அழகாக மாற்றி மென்மையாக்குகிறது.

நீரிழிவு பாதிப்புக்கு

சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். இதற்கு டிராகன் பழம் பல வழிகளில் உதவுகிறது. நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் டிராகன் பழத்தை தினமும் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும்.


செரிமான அமைப்பு மேம்பட

செரிமான செயல்முறை உடலில் சரியாக இயக்கம் பெற்றால் மட்டுமே உடல் ஆரோக்யமாக இருக்கும். செரிமான செயல்முறையை சரியாக வைத்திருக்க டிராகன் பழத்தை உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள நார்ச்சத்து உடலில் நடைபெறும் செரிமான பணிகளை சீராக செய்வதற்கு உதவி புரிவதுடன் செரிமான அமைப்பையும் மேம்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் போன்ற எந்த பிரச்னைகளும் ஏற்படாமல் தடுக்கிறது.

டிராகன் பழத்தின் தீமைகள்

Dragon fruit in tamil


டிராகன் பழத்தில் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் உள்ளன. அதையும் நாம் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

டிராகன் பழத்தை அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் டிராகன் பழத்தை அளவோடு உட்கொள்ளவேண்டும்.

டிராகன் பழம் ஆரோக்யத்திற்கு நன்மை பயக்கும். எனினும், இதை அதிகமாக உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

டிராகன் பழத்தை சாப்பிட்டப்பின் உடல் நலம் தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் எதிர்கொள்ள நேரிட்டால், பழம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை மற்றும் மருத்துவரின் பரிந்துரைகளை பெறவேண்டும்.

Updated On: 30 Aug 2023 10:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை