/* */

Cough Home Remedies in Tamil-இருமல் வந்திடிச்சா..? கவலைய விடுங்க..! இதோ மருந்து ரெடி..!

இருமல் என்றால் பலர் டாக்டரிடம் ஓடுவார்கள். அல்லது மருது கடாயில் இருமல் சிரப் வாங்கி குடிப்பார்கள். ஆனால் எளிய வீட்டு வைத்தியம் உள்ளது. பாதிப்பும் இல்லாதது.

HIGHLIGHTS

Cough Home Remedies in Tamil-இருமல் வந்திடிச்சா..? கவலைய விடுங்க..! இதோ மருந்து ரெடி..!
X

cough home remedies in tamil-இருமல் நீங்க வீட்டு வைத்தியம் (கோப்பு படம்)

Cough Home Remedies in Tamil

குளிர்காலம் வந்துவிட்டால் கூடவே உடல்நல குறைபாடுகளுக்கும் பஞ்சம் இருக்காது. சளி, இருமல் அடிக்கடி ஏற்படும். உடல் சோர்வு ஏற்படும். அதுமட்டும்மல்லாமல், உடலும் வானிலை மாற்றத்தின் சொல்பேச்சைத்தான் கேட்கும். நாள் முழுக்க இருமிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும்.

அலுவலகம் சென்றால் ஏ.சி. குளுரும். என்னதான் மாத்திரை மருந்து என்றாலும், உடம்பு உடனடியாக சரியாகிவிடாது. இப்படி நிறைய சொல்லலாம். உடநல குறைவு என்றவுடன் டாக்டரிடம் சென்றால் மருந்து சாப்பிடனுமேன்னு கவலையா? விடுங்க. இதோ வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே சளி, இருமலை சமாளிக்கலாம். பனிக்காலத்தில் உடல்நலத்தைப் பாதுகாக்க வீட்டு வைத்தியம் இருக்கிறது. என்னென்ன வழிமுறைகள் என்று இக்கட்டுரையில் பார்க்கலாம் வாங்க.


Cough Home Remedies in Tamil

நமது சமையலில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் மருத்துவ குணம் வாய்ந்தது. உடலுக்கு ஏற்படும் பலவகை பிரச்னைகளை சரிசெய்வதில் இவை முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல உணவு முறையே மருந்தாக அமைகிறது என்பதை பலர் சொல்லி கேட்டிருப்போம் இல்லையா. ஆமாம். இது பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

அதிமதுரம், பெருஞ்சீரகம், சீரகம், வெந்தயம், மிளகு, கிராம்பு, பட்டை,இஞ்சி, சுக்கு, திப்பிலி உள்ளிட்டவற்றை சளி, இருமலுக்கு பயன்படுத்தி கசாயம் வைத்து குடிக்கலாம். கற்பூறவள்ளி, துளசி போன்றவைகள் சளி, இருமல் குணமாக நல்ல மருந்தாக இருக்கும் என்று சொல்கின்றனர். குறிப்பாக, சளி, இருமல் பிரச்னைக்கு அதிமதுரம் சிறந்த தீர்வைத் தருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமதுரத்தின் நன்மைகள்:

அருஞ்சுவைகளில் இனிப்பு எல்லாவற்றிலும் ஒன்றாக இருக்காது. அதிமதுரத்தைச் சுவைத்துப் பாருங்கள். இனிப்பே வெவ்வேறு சுவையாக இருக்கும். அதிமதிரம் வேர் இருமல் சளி, இருமலுக்கு நல்ல மருந்து. வித்தியாசமான இனிப்புச் சுவையை இதில் உணரலாம்.

Cough Home Remedies in Tamil

அதிமதுரத்தைச் சாப்பிடவுடன், அந்த இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நீடித்திருக்கும். எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும். இதை நீரில் ஊறவைத்து, கொதிக்க வைத்து அந்த சாறை குடிக்கலாம். கசாயம் வைக்கும்போதும், இதை ஒரு பொருளாக செய்து கொள்ளலாம். இதோடு பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருகலாம். பனங்கற்கண்டு இருமலுக்கு நல்லது.


சீரகம்

சீர்+அகம்= சீரகம். இது செரிமான மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது. சளி,இருமல் உள்ளிட்ட உடல்நிலை சரியில்லாத நேரங்களில் செரிமான சக்தி குறைந்துவிடும். அதனாலேயே, உடம்பு சரியில்லாதபோது, நாம் தனியாக ஒரு டயட் ஃபாலோ செய்வோம். அப்படியான நேரத்தில், சீரக தண்ணீர் அருந்தலாம். உடலுக்கு திறனை அளிக்கும் வல்லமை சீரகத்திற்கு உண்டு.

Cough Home Remedies in Tamil

துளசி தேநீர்:

துளசி தேநீர் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் கொஞ்சம் இஞ்சியும், தேனும், எலுமிச்சையும் சேர்த்து அருந்தினால் அதன் ருசியே தனி. ஒரு பாத்திரத்தில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் அதில் சில துளசி இலைகளையும், இஞ்சியையும் சேர்க்கவும். வாசனைக்காக கொஞ்சம் ஏலக்காய் சேர்க்கலாம்.

அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். தண்ணீர் அரைக் கப் ஆக குறையும் வரை கொதிக்க விடவும். துளசி தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறும், தேனும் சேர்த்தால் சுவையும் அட்டகாசமாக இருக்கும். சளி, இருமல் காலத்தில் குடிப்பதாகவும் இதமாக இருக்கவும்.

மிளகு, சித்தரத்தை, வெற்றிலை, கற்பூரவள்ளி, துளசி உள்ளிட்டவற்றை கொண்டு கொதிக்க வைக்கலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும்.

இருமல் பொதுவானது மற்றும் பாதிப்பில்லாதது என்றாலும், தொடர்ந்து இருமல், குறிப்பாக வறண்ட மற்றும் சளி, காய்ச்சல், சுவாசக் கஷ்டங்கள் அல்லது இரத்தம் தோய்ந்த சளி போன்ற மற்ற அறிகுறிகளுடன் இருக்கும் போது, மிகவும் தீவிரமான சிக்கல்களைக் குறிக்கலாம்.


எனவே, அதில் கவனம் செலுத்துவது மற்றும் நிலைமைக்கு சிகிச்சையளிப்பது முக்கியம். எனவே, சுவாசப்பாதையில் உள்ள தொற்று கிருமிகளை அழிக்கவும், சளி இருமல் காய்ச்சல் சரி செய்யவும் இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கு உதவும்.

Cough Home Remedies in Tamil

தேவையான பொருட்கள்

மிளகு - 15

கிராம்பு - 7

ஏலக்காய் - 1

வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி ஒரு துண்டு

பட்டை சிறிதளவு

தண்ணீர்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைக்க வேண்டும் பாத்திரம் நன்கு சூடானதும் அதில் மிளகு கிராம்பு, ஏலக்காய் பட்டை இவற்றை மிதமான சூட்டில் நன்கு வதக்க வேண்டும். நன்கு வறுபட்ட பின் அதனை ஒரு உரலில் சூடாக இருக்கும் போதே இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு வெல்லத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களிடம் வெள்ளை இல்லை என்றால் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஒரு துண்டு அளவு இஞ்சியை உரசி எடுத்து கொள்ள வேண்டும். அதனை வெல்லத்துடன் சேர்த்து கொள்ளுங்கள். கூடவே ஒரு ஸ்பூன் அளவுக்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதை பாகுபதத்திற்கு வந்தவுடன் நாம் ரெடி பண்ணி வைத்திருந்த அந்த பொடியை சேர்க்க வேண்டும். பின் நன்கு கலந்து விட வேண்டும். நன்கு ஆறிய பின் அதனை சாப்பிடலாம்.


Cough Home Remedies in Tamil

இதனை நீங்கள் தொடர்ந்து 5 நாள் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை மற்றும் இருமல் நிரந்தரமாக நீங்கும். மேலும்தொண்டையில் கிருமிகள் ஏதேனும் இருந்தால் அவை முற்றிலும் அழிந்து விடும். இதன் சுவை காரமாகவும் சற்று இனிப்பாகவும் இருக்கும்.

இதில் நாம் பயன்படுத்திருக்கும் கிராம்பு தொண்டை கிருமியில் உள்ள தொற்றுகளை அளிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இஞ்சி மிளகுக்கு சளிகளை நீக்கக்கூடிய தன்மை இருக்கிறது. அதுபோல் தொடர் இருமல் இருந்து கொண்டே இருந்தால் அதனை நீக்குவதற்கு ஏலக்காய் உதவும். குறிப்பாக சுருங்கி இருக்கும் சுவாச பாதையை விரிவடைய செய்வதற்கு இந்த ரெமடி பயனுள்ளதாக இருக்கும்.

பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் அரைத் தேக்கரண்டி தேனை கலந்து பருகினால் வறட்டு இருமலை தடுக்கலாம்.

மிளகுப்பால்

பாலை நன்றாக காய்த்து அதில் மிளகு பொடியை போட்டு சூடாக குடித்தால் இருமல் குறையும்.

தேன், அதிமதுரம், இலவங்கப்பட்டை

தேன் - கால் டீஸ்பூன்

அதிமதுரம்- கால் டீஸ்பூன்

இலவங்கப்பட்டை பொடி - கால் டீஸ்பூனில் பாதி அளவு

இவை அனைத்தையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் அதிசயத்தக்க வகையில் இருமல் கட்டுப்படும்.


இருமலை குறைக்க உப்பு நீர்

தொண்டை புண் மற்றும் சலதோஷத்துடன் இருக்கும் அறிகுறிகளை போக்க உப்பு நீர் பயன்படுகிறது. இது சளியை தளர்த்தவும், தொண்டை புண் வலிகளை குறைக்கவும் உதவுகிறது.

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1/2 ஸ்பூன் உப்பை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பிறகு அந்த உப்பு நீரைக் கொண்டு தொண்டையில் படும்படி வாயை கொப்பளிக்கவும். உங்கள் இருமல் குறையும் வரை ஒவ்வொரு நாளும் இதைச் செய்து வருவது மிகவும் நல்லது.

Updated On: 6 Nov 2023 7:19 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்