/* */

cooking in tamil-அசத்தலாக கத்தரிக்காயில் 2 டேஸ்டி உணவு..! செய்து சுவைச்சிப் பாருங்க..!

cooking in tamil-சமையல் என்பது ஒரு கலை. அதை பக்குவமாக செய்து அன்போடு பரிமாறும்போது கூடுதல் சுவை கிடைக்கிறது.

HIGHLIGHTS

cooking in tamil-அசத்தலாக கத்தரிக்காயில் 2 டேஸ்டி உணவு..! செய்து சுவைச்சிப் பாருங்க..!
X

cooking in tamil-கத்தரிக்காய் தொக்கு (கோப்பு படம்)

cooking in tamil-ஆங்கிலத்தில் cooking என்பது தமிழில் சமையல் என்பது பொருளாகும். 'சமைத்தல்' என்பது பக்குவப்படுத்துதல் என்று நேரடி பொருள் தருகிறது. அதாவது உணவு உண்ணுதலுக்கு ஏற்ப உணவுப்பொருளை பக்குவப்படுத்துதலே சமையல்.

இதன் பொருள் அருகிலேயே சமயம் என்பதும் இருக்கிறது. அதாவது மனிதனை பக்குவப்படுத்துவதே சமயம். அதாவது ஆன்மிக நெறிமுறைகள் மனிதனை நெறிப்படுத்தி முழுமையான மனிதனாக பக்குவப்படுத்தும் என்பது பொருள்.

இங்கு நாம் இப்போது பார்க்கப்போவது சமையல். உண்ணுதலுக்கு ஏற்ப பக்குவப்படுத்துதல் ஆகும். அந்த வரிசையில் சமையலுக்கு உங்களுக்கு உதவும் சில சுவையான உணவு வகைகளுக்கான தயாரிப்பு முறைகளை பார்ப்போம் வாங்க.


1. சுவையான கத்தரிக்காய் தொக்கு

இது சப்பாத்திக்கு மட்டுமில்லீங்க இட்லிக்கும் சூப்பரா இருக்கும். செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்:

எண்ணெய் தேவைக்கு ஏற்ப

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும் )

தக்காளி - 2 (பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும் )

கறிவேப்பிலை - சிறிது

கத்திரிக்காய் - 2 ( பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும் )

உப்பு - தேவைக்கேற்ப

மஞ்சள் தூள் - சிறிது

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 2 கப்

வெல்லம் - (உடைத்தது) 2 டேபிள் ஸ்பூன்

cooking in tamil


செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு போட்டு பொரிந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி தக்காளி கூழாக வரும் வரை வதக்க வேண்டும்.

நன்றாக வதங்கியவுடன் அதில் கத்திரிக்காயை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். கத்தரிக்காய் நன்றாக எண்ணெய் மற்றும் தக்காளியுடன் சேர்ந்து வாசனை வரும்போது உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்னர் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, கத்திரிக்காயை நன்கு வேக வைக்க வேண்டும். கத்திரிக்காய் நன்கு மென்மையாக வெந்ததும், அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறி, இறக்கினால், சுவையான கத்திரிக்காய் தொக்கு தயார்.( புளிச்சாற்று தண்ணீர் அளவே போதும்) இப்போது கம கம வாசனையுடன் கத்தரிக்காய் தொக்கு ரெடி.

சும்மா..வாயில் ஜாலம் ஊறுதா..போங்க இட்லி போட்டு சாப்பிடுங்க.

..........................................................................

cooking in tamil


2. கத்தரிக்காய் மசாலா (சப்பாத்திக்கு)

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 2 (நீளமாக அல்லது சரிவாக நறுக்கலாம் )

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1 அல்லது 2 (காரத்துக்கு ஏற்ப)-(நீளமாக கீறியது)

புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

சாம்பார் பவுடர் - 2 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 1 டீஸ்பூன் (சுவை சேர்ப்பதற்காக சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரையும் சேர்க்கலாம்)

உப்பு - தேவைக்கு ஏற்ப

தாளிப்புக்கு தேவையானவை

cooking in tamil

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

பட்டை - 1 சிறிய துண்டு

ஏலக்காய் - 2

கிராம்பு - 2

அன்னாசிப்பூ - 1

பிரியாணி இலை - 2


செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

அதன்பின் தக்காளி, உப்பு, சர்க்கரை, சாம்பார் பவுடர், கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்றாக கிளறி, தக்காளி நன்றாக வெந்து பேஸ்ட் போல வேகும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் கத்திரிக்காயை சேர்த்து, புளிச்சாற்றினை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு அதை மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும். நன்றாக ஆவி வரும்போது அதில் 1 கப் நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து 8 முதல் 10 நிமிடம் கொதிக்க விடவேண்டும். சாம்பார்பொடி வாசனை இல்லாத அளவுக்கு வாசம் வரும்வரை கொதித்தால் சுவை கூடும்.

பின்னர் அந்த மசாலா மீது கொத்தமல்லித் தளையை தூவினால், சுவையான கத்திரிக்காய் மசாலா தயார். இது அதிக தண்ணீராகவும் இருக்கக் கூடாது. அதேவேளை கெட்டியாகவும் இருக்கக்கூடாது. சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடும் வகையில் ஒரு கூழ்ம நிலையில் இருந்தால் சுவை கூடும்.

வாசனை பார்த்தீங்களா..கும்முன்னு இருக்கு. சப்பாத்தி ரெடி..ஒரு கட்டு கட்டுங்க..

இன்னிக்கு கத்திரிக்காயில் ரெண்டு மெனு பார்த்துட்டோம். செய்து பார்த்து சுவையை ருசிங்க.

Updated On: 3 Feb 2023 7:32 AM GMT

Related News