/* */

தேர்வுகளின்றி வேலை... சம்பளம் 30K to 1.5L ரூபாய்யாம்...! உடனே முந்துங்கள்..!

தமிழ்நாடு வன அனுபவ கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் முந்துங்கள்.

HIGHLIGHTS

தேர்வுகளின்றி வேலை... சம்பளம் 30K to 1.5L ரூபாய்யாம்...! உடனே முந்துங்கள்..!
X

மாதம் 30 ஆயிரத்திலிருந்து தொடங்கி 1.50 ஆயிரம் ரூபாய் வரை உங்களின் பணிக்கு ஏற்ப சம்பளம் தர அரசு தயாராக இருக்கிறது. நீங்கள் அதற்கான தகுதியுடன் இருந்தால் உடனடியாக பதிவு செய்யுங்கள். வேலை வாய்ப்பை உறுதி செய்யுங்கள்.

தமிழ் நாடு வன அனுபவ கழகத்தில் எழுத்து தேர்வு இன்றி, பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TNWEC என்று அழைக்கப்படும் தமிழ்நாடு வன அனுபவ கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒரு துறை நிறுவனம் ஆகும். இந்த கழகத்தில் தமிழ்நாடு முழுக்க இருக்கும் சுற்றுலாத் துறைச் சார்ந்த திட்டங்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.

TNWEC என்று அழைக்கப்படும் தமிழ்நாடு வன அனுபவ கழகத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. இங்குதான் காலியிடங்களை நிரப்புவதற்கான பணி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தலைமை செயல் அதிகாரி: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். மேனேஜ்மென்ட், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், டூரிசம் உள்ளிட்டவற்றில் முதுகலை படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மாதசம்பளமாக ரூ.1.50 லட்சம் கிடைக்கும்.

நிறுவன செயலாளர் : இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். சிஎஸ் (இந்திய கம்பெனி செக்ரட்டி நிறுவனத்தின் உறுப்பினர்) தகுதியுடன் இருக்க வேண்டும். தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.75 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும்.

நிதி அதிகாரி : இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். சிஏ, சிடபிள்யூஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.75 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பல் கூறப்பட்டுள்ளது.

நிர்வாக அதிகாரி : இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். எம்பிஏ, மேனேஜ்மென்ட் தொடர்பான படிப்புகளில் முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும்.

உதவி அதிகாரி : அசோசியேட் (தொழில்நுட்பம்) பணிக்கு ஒருவரும், அசோசியேட் (பைனான்ஸ்) பணிக்கு ஒருவர் என மொத்தம் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அசோசியேட் (டெக்னிக்கல்) பணிக்கு டூரிசம் அன்ட் ஹாஸ்பிட்டாலிட்டி, எஃகோ டூரிசம், ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் சயின்ஸ் பிரிவுகளில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.

உதவி அதிகாரி : (நிதி) பணிக்கு பிபிஏ மற்றும் பைனான்ஸ் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்

எப்படி விண்ணப்பிப்பது? : தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://tnwec.com இணையதளம் சென்று Career என்பதை கிளிக் செய்து டிசம்பர் மாதம் 25ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

வேலை தேடுகிறீர்களா? உங்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கலாம்.

புதுக்கோட்டை மாவட்டம்,டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 23.12.2023 சனிக்கிழமையன்று நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 23.12.2023 (சனிக்கிழமை) அன்று காலை 8. மணி முதல் பிற்பகல் 3. மணி வரை புதுக்கோட்டை லெணா விளக்கு, திருமயம் தாலுகா, செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. முழு செய்தியையும் படிங்க

Updated On: 13 Dec 2023 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!