/* */

நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Coronavirus live updates - நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

Coronavirus live updates - இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றிலிருந்தும் 11,047 பேர் குணமடைந்துள்ளதாக பதிவாகியுள்ளன. கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியவர்கள் மொத்தம் 53,852 ஆக உள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பதிவான மொத்த பாதிப்பு 0.12 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,047 பேர் குணமடைந்துள்ள நிலையில், இந்தியாவின் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,43,47,024 ஆக அதிகரித்து 98.68 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று விகிதத்தை 3.62 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உள்ளது.

latest covid news in tamil

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ், இந்தியா இதுவரை 220.66 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்களை (95.21 கோடி இரண்டாவது டோஸ் மற்றும் 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்) வழங்கியுள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 4,775 டோஸ்கள் வழங்கப்பட்டன.

கடந்த 24 மணி நேரத்தில் 2,08,112 சோதனைகள் நடத்தப்பட்டதில் மொத்தம் 92.63 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

new covid cases in india today

கடந்த ஏப்ரல் 20ம் தேதியன்று, நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, நிலைமையை மதிப்பிடுவதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பிகே மிஸ்ரா தலைமை தாங்கினார்.

இந்த சந்திப்பின் போது, உலகளாவிய கொரோனா தொற்று நிலைமை பற்றிய கண்ணோட்டத்தை வழங்கும் ஒரு விரிவான விளக்கத்தை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் வழங்கினார்.

today corona cases in india last 24 hours

மேலும் தடுப்பூசியின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மருந்து கிடைப்பது மற்றும் உள்கட்டமைப்பு தயார்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் நிலைமை குறித்து கடுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

covid cases in india in last 48 hours today

தற்போதைய நிலவரப்படி, கர்நாடகாவில் 1,624 , கேரளாவில் 12,620, மகாராஷ்டிராவில் 4,874 , குஜராத்தில் 1,502, டெல்லி 4,279, தமிழ்நாட்டில் 3,312 இமாச்சலப் பிரதேசம் 1,062, ஹரியானா 3,993, சத்தீஸ்கர், 2,667, 5,637 பிரதேசத்தில் 3,550 பேரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொரோனா தொற்று அதிகரித்து வருவதற்கு XBB.1.16 மாறுபாடு தான் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுவரை 220.66 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், சுமார் 4,775 தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Updated On: 29 April 2023 5:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!