/* */

அலோபதி குறித்து கருத்து; பாபா ராம்தேவுக்கு சுப்ரீம் கோர்ட் 'குட்டு'

அலோபதி மருத்துவ முறையை, பாபா ராம்தேவ் விமர்சிக்கக் கூடாது என்று, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது.

HIGHLIGHTS

அலோபதி குறித்து கருத்து; பாபா ராம்தேவுக்கு சுப்ரீம் கோர்ட்  குட்டு
X

அலோபதி மருத்துவத்தை விமர்சிக்க கூடாது என, பாபா ராம்தேவுக்கு, சுப்ரீம் கோர்ட் ‘குட்டு’ வைத்தது.

கொரோனா இரண்டாவது அலை உச்சம் பெற்று இருந்த வேளையில், 'ஆக்சிஜன் கிடைக்காமலோ அல்லது சிகிச்சை கிடைகாமலோ அல்ல... மாறாக அலோபதி மருத்துவத்தால், லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். காசை பிடுங்கும் முறைதான் அலோபதி' என கடுமையாக விமரிசித்து பாபா ராம்தேவ் பேசியிருந்தார்.

பாபா ராம்தேவின் இந்த கருத்துக்கு எதிராக, இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அபோது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு, அலோபதி மருத்துவ முறையை ராம்தேவ் விமர்சிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியது.

மேலும், ''அலோபதி மருத்துவ முறைகளை விட ஆயுர்வேத மருந்துகள், மருத்துவ முறைதான் சிறந்தது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உள்ளதா ? மருத்துவர்கள், மருத்துவ கட்டமைப்பை ராம்தேவ் விமர்சிப்பது என்பது பொதுமக்களின் சுகாதார நலனை பாதிக்கக் கூடியதாகும். எனவே, பாபா ராம்தேவ் இதர மருத்துவ முறைகள் குறித்து அவதூறு பரப்பக் கூடாது" என்று கூறியது. மேலும் இந்த வழக்கில் மத்திய அரசும் பாபா ராம்தேவும் பதிலளிக்க உத்தரவிட, சுப்ரீம் கோர்ட் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Updated On: 23 Aug 2022 4:40 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  2. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  4. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  6. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  7. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு