/* */

பள்ளி ஆசிரியர்களுக்கு 'நல்ல செய்தி': கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியர்களுக்கு ஓராண்டு கால பணி நீட்டிப்பு செய்து, பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

பள்ளி ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி: கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
X

தமிழகத்தில், கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 3000 ஆசிரியர்கள் வேலை இழக்கும் நிலை சூழல் ஏற்பட்டது. ஏனெனில், ஆசிரியர் பணி நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் கட்டாய சட்டம் உள்ளது.

அதன்படி, கடந்த 2011ம் ஆண்டு நவம்பரில், தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், அந்தாண்டில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள், 5 ஆண்டுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால், ஆசிரியர் பணியை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்புகளுக்கு தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட்ட, 3,000 ஆசிரியர்களுக்கு ஓராண்டு காலத்திற்கு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில், 2021-22ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தற்காலிக பணியிடங்களில் பணிபுரியும் 3000 ஆசிரியர்களுக்கு ஓராண்டிற்கு பணி நீட்டிப்பு வழங்கியும், மேலும் மாத ஊதியம் மற்றும் இதரப்படிகள் ஆகியவற்றை வழங்கவும் ஆணையிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை , தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது , 3 ஆயிரம் பேருக்கும் ஊதியம் மற்றும் இதரபடிகளை வழங்கிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 May 2022 3:30 AM GMT

Related News