/* */

Dandruff Home Remedies in Tamil-பொடுகுத் தொல்லைக்கு எளிய வீட்டு வைத்தியம்..!

உச்சந்தலையில் உள்ள சரும செல்கள் குவிந்து உதிரும் நிலையை பொடுகு என்று அழைக்கிறோம். இதனால் எரிச்சல், அரிப்பு போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.

HIGHLIGHTS

Dandruff Home Remedies in Tamil-பொடுகுத் தொல்லைக்கு எளிய வீட்டு வைத்தியம்..!
X

dandruff home remedies in tamil-பொடுகுத் தொல்லைக்கு வீட்டு வைத்தியம் (கோப்பு படம்)

Dandruff Home Remedies in Tamil

பொடுகு ஏற்படுவதற்கான மற்றொரு காரணம் பூஞ்சை தொற்று. இது சருமத்தை வறட்சி அடைய செய்து உதிரச் செய்கிறது. வறண்ட சருமம் முதல் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் வரை அனைவருக்கும் பொடுகு தொந்தரவு ஏற்படலாம். இதன் வெளிப்பாடாக வெள்ளை செதில்களை உங்கள் ஆடை மற்றும் தலையின் மேற்பரப்பில் பார்க்க முடியும்.

Dandruff Home Remedies in Tamil

இன்றைய காலக்கட்டத்தில் கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல வகையான எண்ணெய்கள், ஷாம்பு, சோப்புகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த பொருட்கள் நம் தலைமுடியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. சிறந்த தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகளைப் பயன்படுத்தினாலும், முடி பிரச்சனைகளுக்கு முடிவே இல்லை. முடி பிரச்சனைகளை சமாளிக்க புதிய தயாரிப்புகளை பயன்படுத்துவதில் சலிப்பு ஏற்பட்டிருந்தால், சில எளிய வீட்டு வைத்தியங்களின் உதவியை நீங்கள் பெறலாம்.

இதோ உங்களுக்காக பொடுகு நீங்க வீட்டு வைத்தியம் :

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் சருமத்தின் அடுக்குகளில் ஆழமாக ஊடுருவி, உச்சந்தலையை வறட்சி அடையாமல் பாதுகாக்கிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் லேசான பூஞ்சை தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகின்றன.

Dandruff Home Remedies in Tamil

ஆழமான கண்டிஷனர் :

உச்சந்தலை முதல் முடியின் நுனி வரை தேங்காய் எண்ணெயை தடவவும்.

உங்கள் தலையை ஷவர் கேப் அல்லது வெதுவெதுப்பான துண்டை பயன்படுத்தி மூடி வைக்கவும்.

30 நிமிடங்கள் வரை காத்திருக்கவும்

பிறகு வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவை கொண்டு உங்கள் முடியை அலசலாம்.

தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு :

ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

இந்த கலவையை உங்கள் உச்சந்தலைக்கு தடவி, உங்கள் கைகளால் மென்மையாக மசாஜ் செய்யவும்

20 நிமிடங்களுக்கு பிறகு ஷாம்புவை கொண்டு உங்கள் முடியை அலசலாம்.

Dandruff Home Remedies in Tamil

சூடான தேங்காய் எண்ணெய் மசாஜ்:

உங்கள் தலை முடியில் நீளத்துக்கு ஏற்ப தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி லேசாக சூடாக்கவும்.

வெதுவெதுப்பாக இருக்கும் இந்த எண்ணெயைக் கொண்டு, உங்கள் தலைமுடியை 5-10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்.

பின் 20 நிமிடங்கள் கழித்து உங்கள் முடியை அலசலாம்.

Dandruff Home Remedies in Tamil

தேங்காய் எண்ணெயுடன் ஆமணக்கு எண்ணெய்:

இவ்விரண்டு எண்ணெய்களையும் சம அளவில் எடுத்து கலக்கவும்.

இதனைக் கொண்டு உங்கள் உச்சந்தலைக்கு மசாஜ் செய்து, வெதுவெதுப்பான துண்டை பயன்படுத்தி தலையை மூடி வைக்கவும்.

இந்த கலவையின் சத்துக்களை உங்கள் தலை முடி மற்றும் சருமம் உறிஞ்சுவதற்கான நேரம் கொடுங்கள். பிறகு 30 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்புவைக் கொண்டு உங்கள் தலைமுடியை அலசலாம்.

Dandruff Home Remedies in Tamil

வெங்காய சாறு:

தேங்காய் எண்ணெயை போலவே வெங்காய சாறிலும் நிறைய பண்புகள் உள்ளன. இது எரிச்சல் மற்றும் அழற்சியை குறைக்கிறது. வெங்காயத்தில் உள்ள ஆன்டி மைக்ரோவியல் பண்புகள் லேசான சருமத் தொற்றுகளை சரி செய்யவும், உச்சந்தலையை நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும் மற்றும் முடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

வெங்காய சாறுடன் எலுமிச்சை சாறு:

வெங்காய சாறு மற்றும் எலுமிச்சை சாறை 2:1 என்ற விகிதத்தில் கலந்து கொள்ளவும்.

இதனைக் கொண்டு உச்சந்தலைக்கு மென்மையான கைகளால் மசாஜ் செய்யவும். இது pH அளவை சீராக்கி, பாக்டீரியாக்களை குறைக்க உதவுகிறது.

20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசலாம்.

Dandruff Home Remedies in Tamil

வெங்காய சாறுடன் கற்றாழை:

வெங்காய சாறுடன் கற்றாழை ஜெல்லை கலந்து உங்கள் தலைமுடிக்கு தடவலாம். இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன.

15-20 வரை காத்திருக்கவும்.

பின் மென்மையான ஷாம்புவை கொண்டு உங்கள் தலைமுடியை அலசலாம்.

Dandruff Home Remedies in Tamil

வெங்காய சாறு மற்றும் தேன்:

வெங்காய சாறுடன் தேன் கலந்து உங்கள் உச்சந்தலைக்கு மசாஜ் செய்யலாம்.

15 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்புவை பயன்படுத்தி முடியை அலசவும்.

வெங்காய சாறு மற்றும் வெந்தயம்:

வெங்காய சாறுடன் வெந்தயப் பொடி சேர்த்து பேஸ்ட் தயார் செய்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலைக்கு தடவவும்.

20 நிமிடங்கள் கழித்து ஷாம்புவை கொண்டு முடியை அலசலாம்.

வெங்காய சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெயுடன் வெங்காய சாறை 2:1 என்று விகிதத்தில் கலந்து கொள்ளவும்.

இதை உங்கள் தலைமுடிக்கு தடவி 15-20 நிமிடங்கள் வரை காத்திருக்கவும்.

பின் ஷாம்புவை கொண்டு தலை முடியை அலசலாம்.

இந்த நடைமுறைகளை செய்து வந்தால் பொடுகு பிரச்னை விரைவில் தீரும்.

Dandruff Home Remedies in Tamil

உங்களுக்கு பொடுகு பிரச்னை இருந்தால், யூகலிப்டஸ் எண்ணெய் தடவுங்கள். யூகலிப்டஸ் எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பை நீக்கும். யூகலிப்டஸ் எண்ணெயை தேங்காய் அல்லது பாதாம் எண்ணெயுடன் கலந்து தடவுவது இன்னும் சிறப்பாக அமையும்.

எலுமிச்சை சாறை தயிருடன் சேர்த்து தலையில் தடவ வேண்டும். இதனை சிறிது நேரம் ஊற வைத்த பின் முடியை அலசினால், பொடுகு தொல்லை நீங்கும்.

பொடுகு பிரச்னை தீர வேப்ப எண்ணெய் சிறந்த தேர்வாக இருக்கும். இது தோலில் ஏற்படும் பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது. மேலும் உங்கள் உச்சந்தலையை பாதுகாக்கவும் இது உதவும்.

வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து, காலை அதனை அறைத்து தலையில் மாஸ்க் போட்டுக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து முடியை அலசவும். இது பொடுகை நீக்க உதவும்.

Updated On: 22 Jan 2024 11:17 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்