/* */

வருகிறது ஜூடோபியா 2! டிஸ்னியுடன் கலக்க தயாரா?

உலகம் முழுக்க பல்வேறு ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர இருப்பது இதன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

HIGHLIGHTS

வருகிறது ஜூடோபியா 2! டிஸ்னியுடன் கலக்க தயாரா?
X

ஜூடோபியா படத்தின் காட்சி

டிஸ்னியின் முதல் காலாண்டு வருவாய் சந்திப்பின்போது, அதன் தலைமை நிர்வாக அதிகாரி பாக் இகர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜூடோபியா 2 படத்தை டிஸ்னி உருவாக்குவதாக கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஜூடோபியா ரசிகர்களுக்கு மிகச் சிறந்த நற்செய்தியாக இது இருக்கும். ஆம் நீங்கள் கண்டு களித்து கொண்டாடிய ஜூடோபியா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதனை டிஸ்னியின் தலைமை செயல் அதிகாரியே அறிவித்துள்ளார். இருப்பினும் இது குறித்த வேறு எந்த தகவலையும் அவர் குறிப்பிடவில்லை.

ரிச் மோரே, பைரான் ஹவார்டு இயக்கத்தில் ஜேர்டு புஷ், பில் ஜான்ஸ்டன் திரைக்கதை அமைப்பில் உருவான படம் ஜூடோபியா. இது கடந்த 2016ம் ஆண்டு வெளியானது. வால் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தின் பட்ஜெட் 150 மில்லியன் டாலர்கள். ஆனால் இது பாக்ஸ் ஆபிஸில் பண்ணிய கலெக்ஷன்ஸ் 1 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பணம்.

உலகம் முழுக்க பல்வேறு ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர இருப்பது இதன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Updated On: 9 Feb 2023 6:13 AM GMT

Related News