/* */

Vikraman biggboss tamil season 6-குயின்சி ஒரு குழந்தை..பதறிய விக்ரமன்..! என்ன ஆச்சு..? படீங்க..!

Vikraman Biggboss Tamil Season 6-இதற்கு முந்தைய பிக் பாஸ் சீசன்களைக்காட்டிலும் இந்த சீசனில் குறும்புகளுக்கு பஞ்சம் இருக்காது என்று நன்றாகவே தெரிகிறது.

HIGHLIGHTS

Vikraman biggboss tamil season 6-குயின்சி ஒரு குழந்தை..பதறிய விக்ரமன்..! என்ன ஆச்சு..? படீங்க..!
X

Quincy biggboss tamil season-பிக் பாஸ் சீசன் 6 (கோப்பு படம்)

Vikraman Biggboss Tamil Season 6-பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் போடும் செல்லச் சண்டைகள் மற்றும் குறும்புத்தனமான காட்சிகள் [போன்றவை பார்வையாளர்கள் மத்தியில் ஒரு தனி சுவாரஸ்யத்தை உருவாக்கியுள்ளது. இதுக்காகவே சண்டை போட்டுக் கொள்ளுவாய்ங்களோ என்று நாம் வடிவேல் பாணியில் யோசித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.


Vikraman biggboss tamil season 6

ஏற்கனவே 5 சீசன்கள் முடிந்துள்ளன. அந்த சீசன்களில் இல்லாத அளவாக இந்த சீசனில் ஒருவரை ஒருவர் குறும்பு செய்துகொள்வது குறிப்பாக ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் குறும்புத்தனம் செய்துகொள்வது அதிகமாக இருப்பதை ரசிகர்கள் கண்கூடாக பார்த்து வருகின்றனர். குறிப்பாக வேறு எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் சக போட்டியாளர்களை பிராங்க் செய்வது அதிகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த சீசனின் வலிமையான போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமனையே சில போட்டியாளர்கள் சேர்ந்து பிராங்க் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

'குயின்ஸி ஒரு சின்ன பாப்பா' அதாவது குழந்தையாம் என்றும் அமுதவாணன் கூறியதை அடுத்து அது குறித்து விக்ரம் பதிலுக்கு கமெண்ட் அடித்துள்ளார். இதையடுத்து குவின்ஸி தன்னை குழந்தை என கிண்டல் செய்கிறார்கள் என்று கதறி அழத் தொடங்கிவிட்டார். இடையில் புகுந்த நிவாஷினி அவருக்கு ஆறுதல் கூறுகிறார்.'


Vikraman biggboss tamil season 6

இந்த களேபரங்களுக்கு மத்தியில் ஆயிஷா இந்த பிரச்சனையை கையில் எடுத்து விக்ரமன் மற்றும் அமுதவாணனிடம் வாதிடுகிறார். . எப்படி குயின்ஸியை நீங்கள் குழந்தை என்று சொல்வீர்கள் என்றும் அவர் அவர்களிடம் கேட்கிறார். அதற்கு விக்ரமன், 'நான் குயின்ஸியை குழந்தை என்று சொல்லவில்லை, அமுதவாணன் தான் கூறினார் என்று ஆயிஷாவிடம் கூறினாலும் ஆயிஷா அதையெல்லாம் கேட்காமல் அவருடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்கிறார்.

இந்த நிலையில் திடீரென ஆயிஷா, குயின்ஸி, நிவாஷினி ஆகிய மூன்று பெரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அதுக்கு அப்புறம் தான் இது குறும்புத்தனமாக செய்த பிராங்க் என்பது தெரியவந்தது.

அப்பாடா தப்பிச்சோம். இல்லன்னா இந்த பொண்ணுங்கல்லாம் சேர்ந்து எதையாவது சொல்லி பிரச்னையை பெரிசாக்கிடுவாங்க என்று விக்ரமனுகு அதன் பின்னர் தான் நிம்மதி ஏற்பட்டது. மூவரும் சேர்ந்து விக்கிரமனை பிராங்க் செய்த இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சீசனில் இன்னும் என்னென்னல்லாம் நடக்கப்போகுதுன்னு பார்வையாளர்களும் காத்து இருக்கின்றனர்.


பிக் பாஸ் சீசன் 6, முந்தைய சீசன்களைவிட சிறப்பாக இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காரணம், ஏற்கனவே 5ம் சீசனில் பங்கேற்பாளர்கள் தேர்வில் சொதப்பல் ஏற்பட்டதே காரணம் என்பதால், இந்த சீசனில் பங்கேற்பாளர்கள் தேர்வு மிக நேர்த்தியாக நடத்தப்பட்டது. அதுவே இந்த சீசன் ருசிகரமாக போவதற்கு காரணம் என்கிறார்கள் ரசிகர்கள்.

அந்த குறும்புகளைப்பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க...

https://twitter.com/drkuttysiva?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1589678322447155201%7Ctwgr%5Eaaf8514475cd14f7dfb2526c5f1050da8978da1a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiaglitz.com%2Fvikraman-pranked-by-quincy-and-ayisha-biggboss-tamil-season-6-tamilfont-news-327055


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Nov 2022 7:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை