/* */

உன்னோட மாஸ்டர் பிளான் எனக்கு தெரியும்: வனிதா விஜயகுமார்

Vanitha Vijayakumar-உன்னோட மாஸ்டர் பிளான் என்னன்னு எனக்குத் தெரியும், என் கிட்ட வச்சுக்காத என ரவீந்தர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் நடிகை வனிதா விஜயக்குமார்.

HIGHLIGHTS

உன்னோட மாஸ்டர் பிளான் எனக்கு தெரியும்: வனிதா விஜயகுமார்
X

வனிதா விஜய்குமார் (பைல் படம்)

Ravinthar mahalakshmi wedding-சில வாரங்கள் முன்பு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். மகாலட்சுமிக்கு முன்பே அனில் என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. பின்னர் இருவரும் பிரிந்தனர். ரவீந்தரும் தனது மனைவியைப் பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார். இதற்கிடையே மகாலட்சுமி - ரவீந்தர் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

அவர்களின் திருமணம் இணையத்தில் காட்டு தீ போல பரவியது. அதோடு திருமண படங்களும் வைரலானது. அந்த சமயத்தில், "மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பிஸியாகவும் இருக்கிறேன். கர்மா ஒரு பிட்ச்... அவளுக்கு திருப்பி கொடுக்க தெரியும் .. நான் அவளை முழுமையாக நம்புகிறேன்" என ட்வீட் போட்டிருந்தார் வனிதா விஜயக்குமார்.

Vanitha Vijayakumar-ரவீந்தர் - மகாலட்சுமி திருமணம் குறித்து தான் வனிதா அவ்வாறு ட்விட்டரில் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. தவிர, வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்துக் கொண்ட போது அதை கடுமையாக விமர்சித்திருந்தார் ரவீந்தர்.

இந்நிலையில் தற்போது அந்த ட்வீட் குறித்து கேட்ட கேள்விக்கு யூ-ட்யூப் சேனல் ஒன்றில் பதிலளித்திருக்கும் வனிதா, "நான் கர்மாவை முழுமையாக நம்புகிறவள். மொத்தமாக நான்கைந்து விஷயங்கள் என் வாழ்க்கையில் கர்மாவால் அந்த சமயம் நடந்தது. 40 வயதுக்கு மேல் தான் வாழ்க்கை நமக்கு திரும்ப கொடுக்கும், அப்படித்தான் எனக்கும் நடக்கிறது.

Vanitha Vijayakumar-அந்த ட்வீட் ரவீந்தர் பற்றியதல்ல என்றும் என்னால் சொல்லிவிட முடியாது. மொத்தமாக நான்கைந்து விஷயங்களின் வெளிப்பாடு தான் அது. அது மட்டுமில்லாமல், 'ரவி உன் மாஸ்டர் பிளான் என்னன்னு எனக்கு தெரியும். என் கிட்ட வச்சுக்காத' என்றவர், 'எதுக்கு இவங்க எல்லார் கேள்விக்கும் பதில் சொல்லிட்டு இருக்காங்க. பேசுறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க. சோஷியல் மீடியாவுல கமெண்ட் செக்‌ஷனை ஆப் பண்ணி வச்சிட்டு போய் வேலைய பாக்க வேண்டியது தானே' என அறிவுரையும் வழங்கினார்.

Updated On: 17 Sep 2022 1:15 PM GMT

Related News