/* */

அடுத்தடுத்த வசூல் சாதனைகளில் அதகளப்படுத்தும் தெலுங்கு சினிமா..!

தெலுங்குப்படங்கள் உலகம் முழுவதும் வசூலில் சாதனைசெய்து வர, 'சீதா ராமம்' படமும் வசூல் சக்சஸில் வரிந்துகட்டி நிற்கிறது.

HIGHLIGHTS

அடுத்தடுத்த வசூல் சாதனைகளில் அதகளப்படுத்தும் தெலுங்கு சினிமா..!
X

அண்மைக்காலமாகவே தெலுங்குப் பட உலகம் பிரமாண்டத் திரைப்படங்களைத் திரையிட்டு வசூலில் சாதனை படைத்து வருகிறது. அண்மைச் சான்றாக 'புஷ்பா', 'ஆர்ஆர்ஆர்', 'கேஜிஎஃப்' படங்களைச் சொல்லலாம். இந்தி, தமிழ் உள்ளிட்ட பிற மொழிப்படங்கள் தியேட்டரில் திரையிட்டு வசூலை அள்ள தள்ளாட்டம் போடும் நிலையில், இப்படி தெலுங்குப் படங்களின் அசாத்திய வசூல் சாதனை திரைப்பட வர்த்தக உலகத்தை புருவம் உயர்த்தி வியக்க வைக்கிறது. அதேநேரம் தெலுங்கப் பட வியாபாரத்தின் மீது அனைவரையும் ஆர்வக்கண் பதிக்க வைக்கிறது.

இந்தநிலையில், ஆகஸ்ட் ஐந்தாம் தேதி வெளியான தெலுங்குப் படமான 'சீதா ராமம்' உலகம் முழுவதும் வெளியான மூன்றே நட்களில் வசூலில் 25 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தை, வைஜெயந்தி மூவீஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தில் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்க அவருடன் இந்தி நடிகை மிருணாள் தாக்கூர், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். அத்துடன், ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். காதல் கதையான 'சீதா ராமம்' வயது வித்தியாசம் இன்றி ஒட்டுமொத்த உலக சினிமா ரசிகர்களையும் கவர்ந்திழுத்துள்ளதாம். இதனால், தினம் தினம் வசூல் ஏறுமுகம்தானாம்.

படத்தை தெலுங்கில் தயாரித்திருந்தாலும், தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு படம் வெளியாகியுள்ளது. எதிர்மறையான விமர்சனங்களால் படம் வெளியானவுடன் வசூலில் சற்று தொய்வு ஏற்பட்டாலும். இன்னொரு புறம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் படத்தை உச்சி முகர்ந்து பாராட்டு மழை பொழியத் தொடங்கினர். இதனால், படம் வெளியான இரண்டாவது நாளே சூடுபிடிக்கத் தொடங்கி வசூலில் சாதனை படைக்கலானது.

இந்தநிலையில் இதுவரை படம் வெளியான மூன்றே நாட்களில் 25 கோடி பணம் வசூல் செய்துள்ளதாக தயாரிப்புத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 'சீதா ராமம்' படம் பாக்ஸ் ஆபீஸில் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாகவே வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு எகிறி அடிக்கிறது.

Updated On: 9 Sep 2022 12:04 PM GMT

Related News