/* */

நடிகர் டி.ராஜேந்தருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் டி. ராஜேந்தர், சிகிச்சைக்காக விரைவில் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட உள்ளார்.

HIGHLIGHTS

நடிகர் டி.ராஜேந்தருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு
X

பிரபல இயக்குனரும் நடிகருமான டி. ராஜேந்தர், உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே அவருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயத்தில் ரத்தக்குழாயில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்காக, ராஜேந்தரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் குணமடைவதில் தொடர்ந்து சில சிக்கல் நிலவுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக டி. ராஜேந்தரை, சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Updated On: 24 May 2022 5:30 AM GMT

Related News