/* */

கவர்ச்சிக்கு பஞ்சமில்லை.. தமிழில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

arya jhanvi kapoor in bhaiya part 2 - 'பையா 2' படத்தில் ஆர்யா மற்றும் ஜான்வி கபூரை நடிக்க வைக்க இயக்குனர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளார்.

HIGHLIGHTS

கவர்ச்சிக்கு பஞ்சமில்லை.. தமிழில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்
X

ஜான்வி கபூர்

arya jhanvi kapoor in bhaiya part 2 - 'பையா 2' படத்தில் ஆர்யா மற்றும் ஜான்வி கபூரை நடிக்க வைக்க இயக்குனர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளார்.

இயக்குனர் லிங்குசாமி கோலிவுட்டின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர், அவர் 'ரன்', 'பீமா', 'பையா', 'அஞ்சான்' போன்ற சில வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் 'தி வாரியர்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். இயக்குனர் தற்போது தமிழில் 'பையா' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு 'பையா 2' என்று பெயரிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் நடிகர்களை மாற்ற அவர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

'பையா' படத்தின் முதல் பாகத்தில் கார்த்தி மற்றும் தமன்னா பாட்டியா ஆகியோர் நடித்திருந்த நிலையில், தற்போது பையா படத்தின் இரண்டாம் பாகத்தில் இயக்குனர் ஆர்யா மற்றும் ஜான்வி கபூரை படத்தில் நடிக்க அணுகியதாக திரைத்துறை வட்டாரங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி உண்மையாக இருந்தால் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாகும் படம். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பையா. இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். பெங்களூரில் இருந்து மும்பைக்கு கார் பயணத்தின் போது ஏற்படும் காதலை அழகாகவும், யதார்த்தமாகவும் காட்டியிருக்கிறார் லிங்குசாமி. கார்த்தி மற்றும் தமன்னா இடையேயான கெமிஸ்ட்ரியும் சூப்பர் அவுட்.

Janhvi Kapoor to debut in Tamil with Lingusamy's 'Baiya 2

தற்போது 13 வருட இடைவெளிக்கு பிறகு லிங்குசாமி பையா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதால், படத்தின் இரண்டாம் பாகத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் முதல் பாகத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடித்த கார்த்தி-தமன்னா இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை என்பதுதான் டுவிஸ்ட். இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யா நடிக்கவிருப்பதாகவும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே தமிழ் படத்தில் நடிக்க ஜான்வி கபூர் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் பையா 2-ம் பாகத்தில் நடிக்க சம்மதிப்பார் என்று தெரிகிறது. தற்போது பையா இரண்டாம் பாகத்தில் நடிக்க ஜான்வி கபூர் ஒப்புக்கொண்டால், கவர்சிக்கு பஞ்சமிருக்காது என்றே சொல்லலாம். பாலிவுட்டில் இவரது புகழ் ரசிகர்களிடையே மேலோங்கி இருப்பதே இதன் சாட்சி. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Updated On: 3 Feb 2023 7:03 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!