/* */

"சாரி ரசிகரே..!" மன்னிப்பு கேட்ட 'வாரிசு' பட ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா..!

Rashmika Mandanna News- விஜய்யின் 'வாரிசு' பட ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா அவரது ரசிகரிடம் மன்னிப்பு கேட்டது தெரியுமா?

HIGHLIGHTS

சாரி ரசிகரே..! மன்னிப்பு கேட்ட வாரிசு பட ஹீரோயின்  ராஷ்மிகா மந்தனா..!
X

rashmika mandanna latest news-நடிகை ராஷ்மிகாமந்தனா

Rashmika Mandanna News- ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே நடித்த புஷ்பா, சீதா ராமம் போன்ற படங்களின் பிரமோஷன் சென்னையில் நடந்தபோது அவர் கலந்துகொள்ளவில்லை. தற்போது விஜய்-ன் வாரிசு படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா தான்.


இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு ரசிகர் ராஷ்மிகா மந்தனாவிடம், 'என்ன நீங்க சென்னையில் நடக்கும் உங்கள் பட பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்?' என்று கேட்டிருந்தார்.

அதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா அவரது ரசிகருக்கு பதில் அளித்துள்ளார். 'நான் ஏற்கனவே நடித்துள்ள தெலுங்கு பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. தற்போது தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறேன். அதனால், இனிமேல் வரும் பட பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நீங்கள் என்னை சென்னையில் பார்க்கலாம். இதுக்கு முன்னாடி கலந்துகொள்ள முடியாததற்கு ரொம்ப சாரி ரசிகரே என்று பதில் கூறியுள்ளாராம்.


ஆக, இனிமேல் ராஷ்மிகா மந்தனாவை சென்னை பட பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பார்க்கலாம். கேள்வி கேட்ட ரசிகருக்கு மற்ற ரசிகர்கள் எல்லாம் பூரிப்பாக வாழ்த்து சொல்றாங்களாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 July 2022 4:37 AM GMT

Related News