/* */

Pathu Thala Day 1 லம்ப்பா அள்ளிய சிம்பு! கலெக்ஷன் எவ்ளோ தெரியுமா?

ஆக்ஷன் காட்சிகள் படத்தில் தரமானதாக இருக்கிறது. படத்தின் கதை பிடிக்காவிட்டாலும் ஆக்ஷன் காட்சிகளுக்காக படத்தைப் பார்த்துவிட்டு வரலாம்.

HIGHLIGHTS

Pathu Thala Day 1 லம்ப்பா அள்ளிய சிம்பு! கலெக்ஷன் எவ்ளோ தெரியுமா?
X

கன்னட மொழியில் சிவராஜ்குமார் நடித்து ஹிட்டான படம் மஃப்டி. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சிவராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு. கதைதான் அங்குள்ளது போல் இருக்குமே தவிர காட்சிகள் அப்படி இருக்காது என்று படக்குழுவே கூறிவிட்டது.

இந்நிலையில் பத்து தல படம் எப்படி இருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள். படத்தின் கதைச் சுருக்கம் என்ன என்பன குறித்த மற்ற தகவல்கள் அனைத்தையும் இங்கு காண்போம்.

சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கலையரசன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் பத்து தல. ஸ்டூடியோ கிரீன் கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் இந்த படம் மார்ச் 30ம் தேதி வெளியாகியுள்ளது. அதிகாலை காட்சி இல்லை என்று கூறிவிட்ட நிலையில் காலை 8 மணிக்கு வெளியானது பத்து தல திரைப்படம்.

சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சிம்பு கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். கௌதம் கார்த்திக் பிரமாதமாக நடித்திருக்கிறார். கௌதம் மேனன் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கதாநாயகியாக பிரியா பவானி ஷங்கர், இசை ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்ட 5 காரணங்களுக்காக பத்து தல படத்தை நாம் திரையரங்கில் பார்க்கலாம்.




கதைக்களம்

அரசு அதிகாரிகளை மிரட்டி தன் பகுதியை ஆண்டு வரும் ஏஜி ராவணனின் பலத்தை தகர்த்து ஏஜிஆரைக் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் பலர். அதில் முக்கியமானவர் துணை முதல்வரான கௌதம் மேனன். ஆனால் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன. அசைக்க முடியாத பலத்தில் இருக்கிறார் ஏ ஜி ஆர்.

ஏ ஜி ராவணனின் மணல் கொள்ளையைத் தடுக்க தனி ஆளாக போராடி வருகிறார் பிரியா பவானி ஷங்கர். அந்த நேரத்தில் அங்கு வருகிறார் கௌதம் கார்த்திக். ஏ ஜி ராவணனின் படையில் தானும் ஒருவராக சேர்ந்துகொண்டு அவர் நம்பிக்கையைப் பெற நினைக்கிறார் கௌதம்.

இந்நிலையில் படத்தில் மிகப் பெரிய டுவிஸ்ட் ஒன்று வெளியாகிறது. அதுதான் படத்தின் முக்கியமான திருப்பமாக அமைகிறது.




திரைவிமர்சனம்

கன்னட படத்தின் ரீமேக் என்றாலும் அந்த சாயல் இல்லாமல் தமிழ் மண்ணுக்கு ஏற்ற கதையாகவே உருவாக்கியிருக்கிறார்கள். மஃப்டி படத்தின் கதையை இப்படி வித்தியாசமான திரைக்கதையில் எழுதி எடுத்திருப்பதற்கு கிருஷ்ணாவுக்கு பாராட்டுக்கள்.

படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் சிம்புதான். அவரின் நடிப்பை தனியாக பாராட்ட வேண்டியதில்லை. கன்னியாகுமரி பகுதியை ஒருவர் ஆண்டு வருகிறார் அரசாங்கத்துக்கு எதிராக நின்று அங்கு ஆட்சிபுரிகிறார் என்றால் அதை நம்பும்படியாக காட்சிகளும், அந்த நடிகரின் நடிப்பும் அப்படி இருக்க வேண்டும். அதைத் தான் செய்திருக்கிறார் சிம்பு.

தனக்கென தனி இடத்தைத் தேடிக் கொண்டிருக்கும் கௌதம் கார்த்திக், இந்த படத்தில் நிதானமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன், காதல், பாடல் காட்சிகளில் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

உண்மையான அரசியல்வாதியாகவே வாழ்ந்திருக்கிறார் கௌதம் மேனன். அநேகமாக இனி தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கௌதம் மேனனுக்கு வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கப்போகிறது.

கன்னடத்தில் முக்கியத்துவம் இல்லாத கதாநாயகி கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம் சிறப்பாக இருக்கிறது. அதை ஏற்றுக் கொண்டு நடித்த பிரியா சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார்.

ஏ ஆர் ரஹ்மானின் பாடல்கள், இசை திரையரங்கில் அதிர்கிறது. நல்ல திரையரங்கத்தை தேர்ந்தெடுத்து படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் பத்து தல படம்.

ஆக்ஷன் காட்சிகள் படத்தில் தரமானதாக இருக்கிறது. படத்தின் கதை பிடிக்காவிட்டாலும் ஆக்ஷன் காட்சிகளுக்காக படத்தைப் பார்த்துவிட்டு வரலாம்.




முதல் நாள் வசூல்

உலகம் முழுக்க வெளியான பத்து தல படத்தின் வசூல் நல்ல நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. சிம்புவுக்கு தமிழகத்தில் பெரிய அளவுக்கு ரசிகர்கள் இருப்பதால் முதல் நாள் கலெக்ஷன் 7 கோடி அளவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

வியாழக்கிழமை வெளியானதால் முதல் இரண்டு தினங்கள் சுமாரான வசூல் இருந்தாலும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வசூல் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விடுதலை படம் வெளியாகியுள்ளதால் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


இரண்டாம் நாள் வசூல்

முதல் நாளில் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில் உலகம் முழுக்க சுமார் 12.3 கோடி ரூபாய் வசூலித்திருந்தது பத்து தல திரைப்படம். இரண்டாவது நாளில் 18கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்திருக்கிறது. வார இறுதி விடுமுறை என்பதால் இந்த இரண்டு நாட்கள் மிகப் பெரிய அளவில் வசூல் இருக்கும் என்று கூறப்படுகிறது.


மூன்றாவது நாள் வசூல்

இரண்டாவது நாளில் உலகம் முழுக்க 18கோடி ரூபாய் வசூலித்திருந்த பத்து தல படத்துக்கு 3வது நாள் 22 கோடி வசூல் கிடைத்திருக்கிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நிறைய வசூலித்தாலும் படம் இதற்கு மேல் வசூல் செய்ய வாய்ப்பில்லை என்கிறார்கள் போட்டிக்கு வந்த விடுதலை படத்தையே பலரும் பார்க்க விரும்புகிறார்கள். விடுதலை படம் போட்ட தியேட்டர்கள் ஹவுஸ்புஃல் ஆகிக் கொண்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Updated On: 2 April 2023 3:01 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!