/* */

'காந்தாரா' - இந்திய சினிமாவின் மாஸ்டர் பீஸ் என ரஜினி காந்த் பாராட்டு

இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்து, வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் 'காந்தாரா' படத்தை ரஜினி பாராட்டியுள்ளார்.

HIGHLIGHTS

காந்தாரா - இந்திய சினிமாவின் மாஸ்டர் பீஸ் என ரஜினி காந்த் பாராட்டு
X

எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கன்னடத்தில் மட்டும் வெளியான 'காந்தாரா' திரைப்படம் அசாத்திய வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு தமிழில் கடந்த 15-ம் தேதி வெள்ளித்திரையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில், 'காந்தாரா' திரைப்படம் இந்திய சினிமாவின் மாஸ்டர்பீஸ் என தற்போது நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார். கன்னட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி இரு வேடங்களில் நடித்துள்ள, 'காந்தாரா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து வருகிறது.


ஆதிகுடிகளின் உரிமைக்குரலாகவே 'காந்தாரா' திரைப்படம் உருவாகி உள்ளது. பூதகோல நடனம் ஆடுபவராக நடிகர் ரிஷப் ஷெட்டி படத்தில் ருத்ர தாண்டவம் ஆடி அசத்தி உள்ளார். அரசர் கொடுத்த நிலத்தை அபகரிக்க நினைக்கும் அவரது வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் சிறுதெய்வம் கொடுக்கும் சாபத்தால் ரத்தம் கக்கி சாகும் நிலையில், அதன் பின்னர் வன அதிகாரிகள் அந்த மக்களை விரட்டியடிக்கப் போடும் திட்டமும் அதற்கு எதிராக நாயகன் ரிஷப் ஷெட்டி போராடுவதும்தான் 'காந்தாரா' திரைப் படத்தின் மையக் கதை. இந்த ஆண்டு கர்நாடகாவில் 'கே.ஜி.எஃப்', 'கே.ஜி.எஃப்-2' ஆகிய படங்களின் வசூல் சாதனையையே 'காந்தாரா' படம் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'காந்தாரா' திரைப்படம் வெறும் 15 முதல் 18 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது.மிகக் குறைந்த பட்ஜெட்டில் இப்படியொரு தரமான படத்தை எடுத்துக் காட்ட முடியும் என இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி நிரூபித்துள்ளார். படத்தில் அவர் சாமியாடும் அந்தக் காட்சிகள்தான் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி பிரமிக்க வைக்கிறது. அதிலும், அந்த கிளைமேக்ஸ் காட்சிகள் எல்லாமே மெச்சத்தகுந்த உச்சம்.

20 கோடிக்கும் குறைவாக உருவான, 'காந்தாரா' திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத வகையில் உலகம் முழுவதும் ரூ. 200 கோடி வசூலை பெற்று இமாலய சாதனை புரிந்துள்ளது. கன்னடத் திரையுலகில் இந்த ஆண்டு வெளியான, 'கே.ஜி.எஃப்.' 'கே.ஜி.எஃப்-2' திரைப்படம் உலகளவில் ரூ. 1100 கோடி வசூல் செய்த நிலையில், அதன் கர்நாடக வசூலையே 'காந்தாரா' பின்னுக்குத் தள்ளியுள்ளதுதான் மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.


இந்தநிலையில், 'காந்தாரா' திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், 'காந்தாரா' இந்திய சினிமாவின் மாஸ்டர்பீஸ் என புகழ்ந்து பாராட்டி உள்ளார்; நடிகராக, எழுத்தாளராக, இயக்குநராக அசத்திட்டீங்க ரிஷப் ஷெட்டி என்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பு பெரியது எனவும் புகழ்ந்து ட்வீட் போட்டுள்ளார். 'The unknown is more than the known' - கற்றது கையளவு.. கல்லாதது உலகளவு என 'பாபா' படத்தின் பஞ்ச் வசனத்தைப் போட்டு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருப்பது, 'காந்தாரா' படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரஜினிகாந்த்தின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் 'காந்தாரா' படத்தையும் நல்ல படங்களைப் பாராட்டும் ரஜினிகாந்த்தின் நல் மனத்தையும் பாராட்டி வருகின்றனர். ரஜினியின் பாராட்டும் அவரது ரசிகர்களின் பின்னூட்டமும் 'காந்தாரா' படத்தின் பாராட்டு வரிசையில் சிகரமாகத் திகழ்கிறது.

Updated On: 26 Oct 2022 12:16 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...