/* */

தனுஷ் படத்துடன் மோதும் சிவகார்த்திகேயனின் அயலான்! ஒரு வழியாக ரிலீஸ்!

அயலான் திரைப்படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசைமைத்துள்ளார். இவரது இசையில் வேற லெவல் சகோ எனும் பாடல் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. அதன்பிறகு இந்த படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது இந்த படம் ரிலீஸாகும் நிலைக்கு நகர்ந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.

HIGHLIGHTS

தனுஷ் படத்துடன் மோதும் சிவகார்த்திகேயனின் அயலான்!  ஒரு வழியாக ரிலீஸ்!
X

இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குநர் ரவிக்குமாரும் சிவகார்த்திகேயனும் இணைந்த படம் அயலான். இந்த படம் 2016ம் ஆண்டே துவங்கி, படப்பிடிப்பும் பல இடங்களில் நடைபெற்றது. இன்று நேற்று நாளை திரைப்படம் வெற்றியடைந்த நிலையில், சிவகார்த்திகேயனுக்காக பண்ணிய சயின்ஸ் பிக்சன் ஸ்க்ரிப்ட்தான் அயலான். அதில் ஏலியன் கதாபாத்திரங்களுடன் சிவகார்த்திகேயன் இருப்பதாக போஸ்டர்களும் வெளியானது. is ayalaan released

அயலான் திரைப்படம் துவங்கிய நாளிலிருந்து பிரச்னைகளுக்கு மேல் பிரச்னைகள் பல கடந்து படப்பிடிப்பை நிறைவு செய்தது. இதன் பிறகு கம்யூட்டர் கிராபிஃக்ஸ் வேலைகளுக்காக ரிலீஸ் தாமதமாகிக் கொண்டே இருந்தது. இதற்கு அது மட்டும் காரணம் இல்லை என்பதும் சிவகார்த்திகேயன் வாங்கிய கடன்களும் படம் தாமதமாவதற்கு காரணம் என்பதும் பின்னாளில் தெரியவந்தது. அந்த பிரச்னைகளையெல்லாம் தீர்த்து எப்போது படத்தை ரிலீஸ் செய்வார்கள் என ரசிகர்கள் நினைத்து வந்த சூழலில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தெரியவந்துள்ளது. ayalaan movie release date


ayalaan music director அயலான் திரைப்படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசைமைத்துள்ளார். இவரது இசையில் வேற லெவல் சகோ எனும் பாடல் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. அதன்பிறகு இந்த படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது இந்த படம் ரிலீஸாகும் நிலைக்கு நகர்ந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. ayalaan movie release date 2023

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் படமான மாவீரன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படமும் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அதுவும் வரும் ஜூன் மாதம் 29ம் தேதி வெளியாகும் என கூறப்படும் நிலையில், கிட்டத்தட்ட அதே நாளில் தான் அயலான் படமும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஒரே நடிகர் நடித்து இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியானால் இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கும் என்பது தெரிந்த விசயம்தான். இதனால் அயலான் படத்தை தள்ளி வைப்பது என்று முடிவு செய்தால், மாவீரன் படமும் தாமதமாகும் என்று கூறுகிறார்களாம். ayalaan sk movie release date


இதுதவிர தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது. அருண் மாதேஷ்வரன் இயக்கும் இந்த படத்தில் தனுஷுடன் பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஸ், சந்தீப் கிஷன், ஷிவராஜ்குமார், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படமும் ஜூன் மாத இறுதியில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. ayalaan movie download

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் படமும் இதே நாளில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இப்படி தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளை குறி வைத்து தங்களது வேலைகளைத் துரிதப்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த எந்த படக்குழுவும் இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Updated On: 10 April 2023 10:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...