/* */

"பைக் ரேசில் அஜித் சாம்பியன் இல்லை"-நடிகை அதிரடி பேட்டி

பைக்ரேசில் அஜித் சாம்பியன்பட்டம் பெறவில்லை என்று நடிகை அலிசா கூறினார்.

HIGHLIGHTS

பைக் ரேசில் அஜித் சாம்பியன் இல்லை-நடிகை அதிரடி பேட்டி
X

நடிகர் அஜித்துடன் நடிகை அலிசா

நடிகர் அஜித், ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகர். இவர் நடித்து வெளியாகும் படங்கள் தொடர் வெற்றியை பெற்று வருகின்றன. ரசிகர் மன்றங்களை இவர் கலைத்து விட்டாலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்பற்றி வருகிறார்கள். இவர் படம் வெளியாகும் போது சினிமா தியேட்டர்களில் ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். சமூக வலைத்தளங்கில் அஜித் பற்றி புகழ்ந்து தொடர்ந்து ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். இவர் படம் வெளியாகும் போது இவருடைய ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களி்ல் பெரிய மோதலே நடக்கும். அஜித் பைக், கார் ரேஸ் பிரியர். சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நண்பர்களுடன் நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்தில் அஜித்துக்கு அதிக விருப்பம். மேலும் அவர் பைக், கார் ரேஸ்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். பைக், காரை மின்னல் வேகத்தில் ஓட்டியும், நீண்ட தூரம் பயணம் செய்தும் சாதனை படைத்துள்ளார். வெளிநாடுகளிலும் பைக்கில் பல மைல் தூரம் ஓட்டி சென்றுள்ளார். கடந்த சில நாட்களாக வடநாடுகளில் அவர் நண்பர்களுடன் பயணம் செய்த புகைப்படங்கள் பத்திரிகைகள், சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்த நிலையில் நடிகர் அஜித் பற்றி நடிகை அலிசா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அஜித் பைக் ஓட்டுவது பற்றி அவர் விமர்சனம் செய்து பேசியுள்ளார். "நடிகர் அஜித் பைக், கார் பந்தயத்தில் கலந்து கொண்டு இருந்தாலும் அவர் சாம்பியன்பட்டத்தை பெற்றதில்லை" என்று தமிழ்நடிகை அலிசா பேட்டி அளித்து இருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகை அலிசா ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "நடிகர் அஜித்துடன் இணைந்து பல முறை நான் பைக் ஓட்டி இருக்கிறேன். பைக் ஓட்டுவதில் அவரை விட நான் சீனியர். பைக் ஓட்டுவது பற்றி அஜித்துக்கு நான் சில டெக்னிக்குகளை கற்றுக்கொடுத்து இருக்கிறேன். சிலமுறை போட்டி என்று வரும்போது அவர் சிறப்பாக ஓட்டுவார். ஆனால் நான் வெற்றி பெறுவேன். அஜித் பல சர்தேச போட்டிகளில் கலந்து கொண்டாலும் சாம்பியன்பட்டத்தை பெற்றது இல்லை" என்று கூறினார். இவருடைய பேட்டி அஜித் ரசிகர்களுடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகை அலிசாவுக்கு பதில் அளிக்கும் வகையில் அஜித் பைக் ரேசில் வென்ற பட்டங்களை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ்பதிவிட்டு வருகிறார்கள்.

இரும்புக் குதிரை, சைத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அலிசா சிறந்த பைக்ரேசர். நடிகர் அஜித்தின் நெருங்கின தோழியும் ஆவார். நடிகை அலிசா பைக் ரேசிங்கில் இந்திய அளவில் சாம்பியன் பட்டம் வென்றவர். நடிகர் அஜித் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 9 Oct 2022 11:53 AM GMT

Related News