/* */

திருப்பூரில் நடிகர் கமல்ஹாசன் பிரசாரம்

Tirupur News- திருப்பூரில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூ., கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து, நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்தார்.

HIGHLIGHTS

திருப்பூரில் நடிகர் கமல்ஹாசன் பிரசாரம்
X

Tirupur News- திருப்பூரில் தேர்தல் பிரசாரம் செய்த நடிகர் கமல்ஹாசன். 

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் கே.சுப்பராயனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரசாரம் மேற்கொண்டாா்.

மக்கள் நீதிமய்யம் கட்சி, இப்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. மாநிலங்களவை தேர்தலில் கமலுக்கு ஒரு சீட் ஒதுக்கி தருவதை திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி செய்திருக்கிறார். இந்த தேர்தலில் கமல் கட்சியினர் போட்டியிடாத நிலையில், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக நடிகர் கமல் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கோவையை தொடர்ந்து அவர் திருப்பூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருப்பூா், பாண்டியன் நகரில் பிரசாரம் மேற்கொண்டபோது, கமல்ஹாசன் பேசியதாவது:

உலகளாவிய உடை தேவைகளைப் பூா்த்தி செய்யும் நகரம் திருப்பூா். ஜிஎஸ்டி , பெட்ரோல் விலை போன்ற காரணங்களால் தொழில் மந்தமாக உள்ளபோதே ரூ.40ஆயிரம் கோடி வா்த்தகம் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு இருந்திருக்கும்?. இதையெல்லாம் தடை செய்ததுதான் மத்திய அரசின் சாதனை.

திருப்பூா் மாவட்டமாக உருவாக முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் காரணம். நிறைய பாலங்கள், சாலைகள், திட்டங்களைக் கொடுத்துள்ளாா்.

சாயக் கழிவுகளுக்கு முழுத் தீா்வு கொடுப்பேன் என்று பிரதமா் மோடி இங்கு வரும்போது கூறினாா்.

ஆனால், தற்போதுவரை தீா்வு கிடைக்கவில்லை. ஜிஎஸ்டி நல்ல திட்டம் என்றால் அந்த திட்டத்தை சொல்லி வாக்கு கேட்டிருக்கலாம். உலகின் முதல் நிலைக்கு நெருங்கிக் கொண்டிருந்த திருப்பூா் பஞ்சு விலை உயா்வு, நூல் தட்டுப்பாடு காரணமாக பின்தங்கியுள்ளது. ஜிஎஸ்டி, விலைவாசி உயா்வில் இருந்து விடுபட ஆராய்ந்து வாக்களியுங்கள், என்றாா்.

Updated On: 15 April 2024 9:35 AM GMT

Related News