/* */

'பொக்லைன்' இயந்திரத்தை சிறைபிடித்த கவுன்சிலர்கள்

குடிநீர் குழாய் பதிக்க புதிதாக போடப்பட்ட சாலை சேதப்படுத்தப்பட்டதாக, மக்கள் பிரதிநிதிகள், ‘பொக்லைன்’ வாகனத்தை சிறைபிடித்தனர்

HIGHLIGHTS

பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்த கவுன்சிலர்கள்
X

பொக்லின் வாகனத்தை மக்கள் பிரதிநிதிகள் சிறைப்பிடித்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, முருகம்பாளையம் பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக, குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக 'பொக்லைன்' மூலம் சாலையை தோண்டும் பணி நடந்து வருகிறது.

அப்பகுதி ஒன்றியக்குழு கவுன்சிலர் முத்துசாமி, புதுப்பாளையம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பாலசுப்ரமணி ஆகியோர் 'பொக்லைன்' வாகனத்தை சிறைபிடித்தனர். அவர்கள் கூறுகையில், 'பல லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட்டு, தற்போது குழி தோண்டுவதன் மூலம், சாலை சிதிலமடைகிறது. சாலையோரம் உள்ள காலியிடத்தை விட்டு, சாலையில் குழாய் பதிக்கும் பணி மேற்கொண்டது, கண்டிக்கதக்கது,'' என்றனர். 'தோண்டப்பட்ட இடத்தில் மீண்டும் சாலை அமைத்து கொடுக்கப்படும்' என, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதையடுத்து, சிறைபிடித்த வாகனத்தை விடுவித்தனர்.

Updated On: 26 Nov 2021 12:00 PM GMT

Related News