/* */

2021 ஐசிசி கிரிக்கெட் வர்ணனையாளர்களின் சம்பளம் என்ன தெரியுமா?

கிரிக்கெட்டில் வர்ணனையாளர்களாக பணி புரிபவர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

HIGHLIGHTS

2021 ஐசிசி கிரிக்கெட் வர்ணனையாளர்களின் சம்பளம் என்ன தெரியுமா?
X

ஐசிசி கிரிக்கெட் வர்ணனையாளர்களின் சம்பளம் அவர்கள் வேலை செய்யும் மணிநேரம் மற்றும் நாட்களைப் பொறுத்து வழங்கப்படுகிறது. எந்த வர்ணனையாளர், பார்வையாளர்களை சிறப்பாக மகிழ்விக்கிறாரோ அவர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு போட்டி அல்லது ஒரு தொடர் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. கணிசமான சராசரி ஆண்டு சம்பளமும் உள்ளது.

அனைத்து சர்வதேச வர்ணனையாளர்களிலும் இந்திய வர்ணனையாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. அதற்கு நமது பிசிசிஐ - பணக்கார வாரியமாக இருப்பதே காரணம். அதனால் நமது வர்ணனையாளர்கள் ஒரு போட்டிக்கு சுமார் 2 லட்ச ரூபாயும், ஆண்டு சம்பளமாக இந்திய மதிப்பில் சுமார் 4 கோடி முதல் 7 கோடி வரை பெறுகின்றனர். என்ன பெருமூச்சு வருகிறதா..? அவர்களின் உழைப்புக்கும் திறமைக்கும் கிடைக்கும் சம்பளம். நமது இளைஞர்கள் முயற்சி செய்தால், எந்த துறையிலும் சாதிக்கலாம்.

யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்?

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ( 1மில்லியன் டாலர்) - இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய்.

ஹர்ஷா போக்லே ( 1மில்லியன் டாலர்) - இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய்.

சுனில் கவாஸ்கர் ( 1மில்லியன் டாலர்) - இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய்.

சௌரவ் கங்குலி ( 1மில்லியன் டாலர்) - இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய்.

ஷேன் வார்னே ( 1மில்லியன் டாலர்) - இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய்.

இயன் பிஷப் ($900,000)- (இந்திய மதிப்பில் - சுமார் 6.50 கோடி ருபாய்)

மார்க் நிக்கோலா ($ 850,000) (இந்திய மதிப்பில் - சுமார் 6 கோடி ருபாய்)

ஜெப்ரி பாய்காட் ($ 850,000) (இந்திய மதிப்பில் - சுமார் 6 கோடி ருபாய்)

மைக்கேல் வாகன் (இந்திய மதிப்பில் -சுமார் 6 கோடி ருபாய்)

இயன் போத்தம் (இந்திய மதிப்பில் - சுமார் 6 கோடி ருபாய்)

Updated On: 31 Jan 2022 12:20 PM GMT

Related News