/* */

ஜடேஜாவுக்கு புரமோசன்! KL ராகுல்தான் பாவம்!

ஏ பிளஸ் வகை வீரர்களுக்கு மாதம் 7 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படும். ஏ கிரேடு வகையில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு மாதம் 5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் பி கிரேடு வகையில் இருக்கும் வீரர்கள் தலா 3 கோடி ரூபாயை மாத சம்பளமாக பெறுகிறார்கள். இதில் சி கிரேடு வீரர்கள் 1 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்கள்.

HIGHLIGHTS

ஜடேஜாவுக்கு புரமோசன்! KL ராகுல்தான் பாவம்!
X

இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருடாந்தார சம்பள ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் பலருக்கு புரமோசனும் கொடுக்கப்பட்டு சம்பளமும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரையிலான கிரிக்கெட் வீரர்களின் சம்பள ஒப்பந்த பட்டியலில் வீரர்கள் ஏ பிளஸ், ஏ, பி, சி என்று கிரேடு வகையில் பிரிக்கப்பட்டிருப்பார்கள்.

இதில் ஏ பிளஸ் வகை வீரர்களுக்கு மாதம் 7 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படும். ஏ கிரேடு வகையில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு மாதம் 5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்

பி கிரேடு வகையில் இருக்கும் வீரர்கள் தலா 3 கோடி ரூபாயை மாத சம்பளமாக பெறுகிறார்கள். இதில் சி கிரேடு வீரர்கள் 1 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் பிசிசிஐ சில மாற்றங்களைச் செய்து வீரர்களுக்கு புரமோசன் வழங்கி அவர்களின் சம்பளம் உள்பட பல விசயங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஏ பிளஸ் பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு 7 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் புதிதாக இணைந்திருப்பவர் ரவீந்திர ஜடேஜா. இவருக்கும் 7 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு முன் இவர் ஏ கிரேடில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ கிரேடு பிரிவில் இருக்கும் வீரர்களான ஹர்டிக் பாண்ட்யா, அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட், அக்ஸார் படேல் ஆகியோர் மாதம் 5 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார்கள். இதில் ஹர்டிக் பாண்ட்யாவுக்கு டபுள் புரமோசன் கிடைத்துள்ளது.

சி கிரேடில் இருந்த பாண்டியா டபுள் புரமோசன் பெற்று நேரடியாக ஏ கிரேடுக்கு வந்திருக்கிறார். இவரைப் போல பி கிரேடிலிருந்து அக்ஸார் படேல் புரமோசன் பெற்று ஏ கிரேடுக்கு வந்திருக்கிறார். இவர்களுக்கும் 5 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும்

பி கிரேடில் புஜாரா, ஸ்ரேயாஷ், சுப்மன் கில் ஆகியோர் 3 கோடி ரூபாய் மாத சம்பளம் பெற்று வருகிறார்கள். இவர்களுடன் சி கிரேடிலிருந்து பி கிரேடுக்கு மாறிய சூர்யகுமாரும் ஒருவர். மேலும் ஏ கிரேடிலிருந்த கே எல் ராகுல் பி கிரேடுக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இவரது சம்பளம் 5 கோடியிலிருந்து 3 கோடியாக மாறியிருக்கிறது.

சி கிரேடில் பல வீரர்கள் இருக்கிறார்கள். இஷான் கிஷன், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே எஸ் பரத் ஆகியோர் சி கிரேடில் இருக்கிறார்கள். மேலும் ஷிகர் தவான், உமேஷ் யாதவ், யுவேந்திர சஹல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் உள்ளிட்டோர் சி கிரேடில் இருக்கிறார்கள்.

வனேஷ்வர் குமார், மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விருத்திமான் சாஹா, தீபக் சஹார் சம்பளப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.

Updated On: 12 April 2023 11:46 AM GMT

Related News