/* */

ஐபிஎல் இறுதி போட்டி : கொல்கத்தா அணிக்கு 193 ரன் இலக்கு

துபாயில் நடைபெறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் இறுதி போட்டியில் சென்னை அணி 192 எடுத்தது, கொல்கத்தா அணிக்கு வெற்றிக்கு 193 எடுத்தால் கோப்பையை கைப்பற்றும்.

HIGHLIGHTS

ஐபிஎல் இறுதி போட்டி : கொல்கத்தா அணிக்கு 193 ரன் இலக்கு
X

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (விளையாடும் லெவன்): ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (டபிள்யூ/சி), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், டுவைன் பிராவோ, தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (விளையாடும் லெவன்): சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (w), இயோன் மோர்கன் (c), ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி

கொல்கத்தா அணியின் தலைவர் இயான் மோர்கனும், சென்னை அணி கேப்டன் டோனியும் டாஸ் போட்டனர். இதில் கொல்கத்தா அணி டாசில் வென்று பத்து வீச்சை தேர்வு செய்தது.

இதன் மூலம் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஓப்பனிங் பேட்ஸ் மேன்களாக ருதுராஜ் கெய்வாட்டும், டூ பிளெசிஸ் ஆகியோர் களம் இறங்கினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட்டு இழப்புக்கு 192 ரன்களை எடுத்தது.

ருதுராஜ் கெய்வாட் 32ரன்களையும், ராபின் உத்தப்பா 31ரன்களையும், டூ பிளெசிஸ் 86 ரன்களையும் எடுத்தனர். மெய்ன் அலி 37 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 193 எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் கொல்கத்தா அணி 2வது பேட்டிங் விளையாடிவருகிறது.

Updated On: 15 Oct 2021 7:28 PM GMT

Related News