கிடச்சத இழக்குறதும் இழந்தது கிடைக்குறதும்... விக்னேஷ் சிவனின் ஸ்டோரி...!

கிடச்சத இழக்குறதும் இழந்தது கிடைக்குறதும்... விக்னேஷ் சிவனின் ஸ்டோரி...!

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கிடச்சத இழக்குறதும் இழந்தது கிடைக்குறதும்... விக்னேஷ் சிவனின் ஸ்டோரி...!
X

சில பாடல் வரிகள் உண்மையிலேயே வாழ்வில் நடந்து விடும் அந்த வகையில் கண்ணான கண்ணே நீ கலங்காதடி பாடலில் வரும் கிடச்சத இழக்குறதும் இழந்தது கிடைக்குறதும் எனும் வரிகளும் இருக்கு என்பது போல இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்திருக்கிறார்.


அஜித்குமார் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது விக்னேஷ் சிவன் என கடந்த ஆண்டே அறிவித்தது லைகா நிறுவனம். துணிவு படமே ஷூட்டிங் முடியாத நிலையில் இதனை அறிவித்து பரபரப்பைக் கிளப்பியது. ரசிகர்களும் இதனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். நாள்கள் போக போக விக்னேஷ் சிவன் மீது அஜித்துக்கு நம்பிக்கை குறைந்துகொண்டே இருந்தது.

இதனிடைய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் விக்னேஷ் சிவன் கதையை சரியாக திட்டமிடவில்லை எனவும் முழுமையாக ஸ்க்ரிப்ட் கொடுக்கவில்லை எனவும் விக்னேஷ் சிவன் மீது புகார் எழுந்திருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்றாலும் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டது மட்டும் உறுதியானது. அதன்பிறகு அவருக்கு பதிலாக மகிழ்திருமேனி அஜித்குமார் 62 படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் அஜித்குமார் நடிக்கும் 62வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கன்பார்ஃம் என்கிறார்கள். காரணம் ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாவதாக இருந்த கதையில் லைகா தரப்பில் திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் நயன்தாரா போட்ட கன்டிசனால் திரிஷாவை நாயகியாக ஏற்க முடியாது என மறுத்துவிட்டார் விக்னேஷ் சிவன். மேலும் தனது மனைவி நயன்தாராதான் இந்த படத்தின் நாயகி என தான் முடிவு செய்து வைத்திருப்பதாக அவர் கூறியதை அடுத்து இது அஜித் காதுக்கு எடுத்துச் செல்ல, அவரோ உங்கள் படம் உங்கள் முடிவு என தயாரிப்பாளருக்கே முடிவு எடுக்கும் உரிமையைக் கொடுத்துவிட்டார்.

லைகா தரப்பிலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்படவே, லைகாவுக்கு நெருக்கமாக இருக்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி தங்களுடன் இணைந்து ஏற்கனவே பணிபுரிந்த மகிழ் திருமேனி குறித்து பேசியிருக்கிறார். அவரை பரிந்துரையும் செய்திருக்கிறார் என்பதால் உடனேயே இவரது கதையை அஜித்திடம் எடுத்து செல்கிறார்கள். அப்படி செல்லும்போது இவர் ஏற்கனவே விஜய்க்கு கதை சொல்லியிருப்பதை தெரிந்துகொண்ட அஜித், நமக்கு அந்தமாதிரி ஏதும் கதை இருக்கிறதா என கேட்டிருக்கிறார்.


மகிழ் திருமேனி விஜய்க்கு சொன்ன கதையில் ஆக்ஷன் கதை ஒன்றை அஜித்துக்கு கூற அவர் இன்னும் கொஞ்சம் கூடுதல் ஆக்ஷன் காட்சிகளை சேருங்கள் எனவும் குடும்பங்களுக்கு பிடிக்கும் வகையில் செண்டிமெண்ட் காட்சிகளை கூடுதல் அழுத்தமாக மாற்றவும் கேட்டிருக்கிறார். இதனை உடனடியாக ஏற்றுக் கொண்ட மகிழ்திருமேனி, ஒரே ஒரு கண்டிசனுக்கு மட்டும் வருத்தத்தில் இருக்கிறாராம். படப்பிடிப்பை உடனே துவங்கி உடனே முடித்து 3 மாதங்களுக்குள் அஜித்தை விடுவிக்கவேண்டும் என்பது அந்த கண்டிசன். இதனால்தான் இந்த படம் இன்னமும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

Updated On: 2023-03-19T10:16:27+05:30

Related News

Latest News

 1. நாமக்கல்
  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
 2. திருப்பூர்
  திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
 3. தேனி
  சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
 4. குமாரபாளையம்
  ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
 5. விழுப்புரம்
  இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
 6. தேனி
  19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...
 7. தேனி
  ராகுல்காந்தி தகுதி நீக்கம்...உண்மையில் நடந்தது என்ன?
 8. ஈரோடு
  ஈரோட்டில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு
 9. புதுக்கோட்டை
  கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ மனித சங்கிலி போராட்டம்
 10. ஈரோடு
  நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு