Begin typing your search above and press return to search.
மெட்ரோ வாட்டர் மீட்டர்களை திருடி விற்ற நான்கு பேர் கைது
பல்லாவரம் அருகே மெட்ரோ வாட்டர் மீட்டர்களை திருடி விற்ற 4 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
HIGHLIGHTS

மெட்ரோ வாட்டர் மீட்டர்களை திருடியதாக கைது செய்யப்பட்டவர்கள்.
பம்மல் அருகே ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 42 குடியிருப்புகளில் இருந்து அரசாங்கத்தால் வழங்கப்படும் பித்தளை மெட்ரோ வாட்டர் மீட்டர்களை திருடி விற்ற நான்கு நபர்களை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து கைது செய்த போலிசார் சிறையில் அடைத்தனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் மணியரசன்(46), அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது குடியிருப்பிற்குள் வைக்கபட்டிருந்த அரசாங்கத்தால் வழங்கபட்ட, இரண்டு மெட்ரோ வாட்டர் மீட்டர்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் குடியிருப்பில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது வீட்டினுள் வரும் மர்ம நபர்கள் மீட்டர்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இது குறித்து சங்கர் நகர் போலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வந்த போலிசார் அனகாபுத்தூரை சேர்ந்த ஜார்ஜ் அரூண்(20), பரமசிவம்(19), சிலம்பரசன்(18), ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
விசாரணையில், இதுவரை 42 வீடுகளில் வைக்கபட்டிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான, பித்தளை மெட்ரோ வாட்டர் மீட்டர்களை திருடி பழைய இரும்பு கடை நடத்தி வரும் வினோத்(36), என்பவரிடம் விற்றதாக வாக்குமூலம் அளித்ததை அடுத்து நான்கு நபர்களையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.