/* */

ஈரோட்டில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி ஈரோட்டில் நடைபெற்றது

HIGHLIGHTS

ஈரோட்டில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள 230 தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள 230 நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி ஈரோட்டில் புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.

நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள 230 தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சியை மாவட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்தார்.


இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வருகின்ற ஏப்ரல் 19ம் தேதியன்று தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்படி, தேர்தல் நன்னடத்தை விதிகளை கண்காணிக்கும் பொருட்டு பறக்கும் படைக் குழுக்கள், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஈரோடு மாவட்டத்தில், மொத்தம் உள்ள 2,222 வாக்குச்சாவடிகளில் 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு வாக்குப்பதிவு நாள் அன்று இந்த 191 பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 20 சதவீதம் ரிசர்வ் 39 நபர்கள் உட்பட 230 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான முதல்நிலை பணி ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் சுழற்சி முறையில் நேற்று முன்தினம் (8ம் தேதி) டைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள 230 தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி, இன்று (10ம் தேதி) மாவட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சியின் போது, தேர்தல் நுண்பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாள் அன்று மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த பயிற்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகுநாதன், தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கர், உதவி திட்ட அலுவலர் (வளர்ச்சி) மகேஸ்வரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 10 April 2024 2:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்