/* */

ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்: ஆஸ்பத்திரியில் அனுமதி

ராசிபுரம் அருகே, தெரு நாய்கள் கடித்ததில் காயமடைந்த ஒரு சிறுமி மற்றும் இரு சிறுவர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள்  காயம்: ஆஸ்பத்திரியில் அனுமதி
X

பைல் படம்

ராசிபுரம் அருகே, தெரு நாய்கள் கடித்ததில் காயமடைந்த ஒரு சிறுமி மற்றும் இரு சிறுவர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராசிபுரம் அடுத்த வடுகம் காலனி சாலையில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுவர், சிறுமியரை கடித்துள்ளது.

இதில் அப்பகுதியைச் சேர்ந்த தேஜேஸ்வரன் (5), பிரியதர்ஷினி (11), யாகவிர் (5) ஆகிய 3 பேர் காயமடைந்தனர். மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் தேஜேஸ்வரனக்கு உடலில் தையல் போடும் அளவிற்கு நாய் கடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வடுகம் பகுதியில் சுற்றத்திரியும் தெருநாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமா கூறுகையில், அப்பகுதியில் சுற்றித் தெரியும் நாய்களை பிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு முறையாக சிகிச்சை வழங்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

Updated On: 10 May 2024 1:30 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  2. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  5. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  6. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  8. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  9. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  10. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!