/* */

சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தூய்மைப்படுத்திய தூய்மைப்பணியாளர்களின் உழைப்பு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

HIGHLIGHTS

சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்
X

கிரிவலப் பாதையில் தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம் நேற்று முன்தினம் அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி, நேற்று அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைந்தது. அதையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளித்தது. தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 30 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.

இரண்டாவது நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

கலெக்டர் வேண்டுகோள்

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கிரிவலப்பாதையையும், நகரையும் தூய்மையாக வைத்திருந்த ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டது. அதோடு, மக்கும் தன்மையில்லாத, சுற்றுச்சூழலுக்கு கேடுதரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும் அன்னதானம் வழங்குபவர்கள் அந்த இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.

ஆனாலும், கிரிவலப்பாதையில் குப்பை கழிவுகளும், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் என டன் கணக்கில் கடந்த இரண்டு நாட்களில் குவிந்தன. மேலும், அன்னதானம் வழங்க அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்தும், வேறு சில இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதானம் வழங்கும் தன்னார்வலர்கள், அந்த இடத்தை தூய்மைப்படுத்தி செல்ல வேண்டும் என நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டது. ஆனாலும், அன்னதானம் வழங்கிய இடங்களில் ஆயிரக்கணக்கான பாக்குமட்டை தட்டுகளும், வாழை இலைகளும் குவிந்திருந்தன.

குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப்பணியாளர்கள்

இந்நிலையில், இரண்டு நாட்கள் கிரிவலம் முடிந்த நிலையில், நேற்று காலையில் இருந்தே 1800 தூய்மைப்பணியாளர்கள், குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர். அகற்றப்பட்ட குப்பை கழிவுகளை 20 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், மினி லாரிகளில் கொண்டுசென்று நகருக்கு வெளியே சேர்த்தனர்.

நேற்று 105 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அனல் காற்று வீசியது. சாலைகளில் நடந்து செல்ல முடியாதபடி தார் சாலை உருகியது. ஆனாலும், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், தூய்மைப்பணியாளர்கள் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டு கிரிவலப்பாதை மற்றும் தற்காலிக பஸ் நிலையங்கள், மாட வீதி உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தியது அனைவரது பாராட்டையும் பெற்றது.

மேலும், தொடர்ந்து தூய்மைப்பணியில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்களுக்கு, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், கூடுதல் கலெக்டர் ரிஷப், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் பிரியதர்ஷினி, நகராட்சி ஆணையாளர் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Updated On: 25 April 2024 2:03 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...