/* */

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி: மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை

திருத்தணி அருகே 10 ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி:  மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை
X

திருத்தணி அருகே 10-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் மண்ணெண்ணெய் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மேல் பொதட்டூர்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி முரளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள் குமாரி( வயது 14) உண்டு.குமாரி பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது இதில் மாணவி குமாரி 500.க்கு187 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார்.

இவர் சமூக அறிவியல் பாடத்தில் 35-க்கு 10 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வி அடைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி குமாரி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் குடித்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவி குமாரி பரிதாபமாக உயிரை இழந்தார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 10 May 2024 5:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு