/* */

திருவள்ளூர் அருகே வெப்பம் தணிக்க சாலையில் தண்ணீர் தெளித்த இளைஞர்

திருவள்ளூர் அருகே கோடை வெயிலிலிருந்து வாகன ஓட்டுகளை பாதுகாக்க இளைஞர் ஒருவர் சாலையில் தண்ணீர் அடித்து மற்றவர்களின் பாராட்டை பெற்று உள்ளார்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே வெப்பம் தணிக்க சாலையில் தண்ணீர் தெளித்த இளைஞர்
X

திருவள்ளூர் அருகே சாலையில் தண்ணீர் அடிக்கும் இளைஞர்.

திருவள்ளூர் அருகே வெப்பம் தணிக்க சாலையில் தண்ணீர் தெளித்த இளைஞர் செய்த செயல் பாராட்டை பெற்று உள்ளது.

திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் நெடுஞ்சாலையில் வெப்பத்தை தணிப்பதற்காக இளைஞர் ஒருவர் காலையில் தண்ணீர் தெளித்து வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார்.

தற்பொழுது வெப்பம் அதிகரித்துள்ளது மேலும் அக்னி நட்சத்திரம் என்பதால் அனல் காற்று வீசி வரும் நிலையில் சாலையில் செல்பவர்கள் வெப்பத்தின் மிகுதியாக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கடம்பத்தூர் அருகே நெடுஞ்சாலையில் உள்ள கடைகளில் வேலை செய்த இளைஞர் ஒருவர் வெப்ப அனலை தடுக்கும் விதமாக தண்ணீரை பைப் கொண்டு நெடுஞ்சாலையில் அடித்து குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இதனால் அந்த வழியை கடந்த வாகன ஓட்டிகள் சிறிது நேரம் மகிழ்ச்சி அடைந்து அவரை வாழ்த்தி சென்றனர்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்ததை சமாளிக்க முடியாமல் மக்கள் தவித்து வரும் நேரத்தில் சுயநலன் கருதாமல் பொது நலன் கருதி சாலையில் தண்ணீர் அடித்த இளைஞரின் செயலை பாராட்டி வருகிறார்கள்.

Updated On: 7 May 2024 3:02 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  2. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  5. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    Redmi Buds 5A: இசைப் பிரியர்களுக்கான சிறகுகள்
  9. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  10. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு