/* */

மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து

திருப்பரங்குன்றம் அருகே பத்தாண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட மரக்கடையில் தீ விபத்து; பயனற்று கிடந்த மரங்கள் அனைத்தும் தீயில் கருகியது:

HIGHLIGHTS

மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
X

பூட்டிய மரக்கட்டை தீ விபத்து.

திருப்பரங்குன்றம் அருகே 10 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மூடப்பட்ட மரக்கடையில், இன்று தீ விபத்து ஏற்பட்டது பயனற்று இடந்த மரங்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. இரண்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்து தொடர்பாக, திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் - மதுரை சாலையில் மூலக்கரை மூட்டா காலனி அருகே இருந்த, முட்புதரில் இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவி அருகில் இருந்த மரக்கடைக்குள் பரவியது. இதனால், மரக்கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரங்கள் மீதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீ விபத்து தொடர்பாக, அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சி ஈடுபட்டனர். காய்ந்த மரங்கள் என்பதால், தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அதனால், திருமங்கலத்தில் இருந்து மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது சம்பவம் குறித்து, தகவல் இருந்து வந்த திருப்பரங்குன்றம் காவல்நிலைய போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, தீ பற்றிய மரங்கள் வைக்கப்பட்ட இடம் மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த லிங்கம் என்பவருக்கு சொந்தமானது என்பதும், இந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தனிநபர் ஒருவருக்கு இடத்தை வாடகைக்கு விட்டதாகவும், அந்த நபர் மரக்கடை நடத்தி வந்தது தொழில் நஷ்டம் காரணமாக 10 ஆண்டுக்கு முன்பாக மரக்கடையை பூட்டிச் சென்ற நிலையில் மரங்கள் அனைத்தையும் அங்கேயே விட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

பத்தாண்டுகளாக அகற்றப்படாத மரம் என்பதால் தீ விபத்தில் முழுவதும் கருகி சாம்பல் ஆனது. விபத்து தொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார் தீ விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் தீ பரவுவதற்கு முன்பாகவே தீயணைப்புத் துறையினர் மூன்று மணிநேர போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் திருப்பரங்குன்றம் - மதுரை சாலையில் 3 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 9 May 2024 8:56 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  3. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  4. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  5. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  6. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  7. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  8. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!