/* */

மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ முகாம்

மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ முகாம்
X

மதுரை யானைமலை ஒத்தக்கடை அருேக முதுமை தடுப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை சார்பில், முதுமை தடுப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.

மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள காசிம் ரெசிடென்ட்சி குடியிருப்பு பகுதியில், சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை சார்பில், முதுமை தடுப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம் பொது மக்களுக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில், சுபிக்சம் சிறப்பு மருத்துவமனையின் நிறுவனரும் பெண்கள் நல மருத்துவருமான இராஜேஸ்வரி பாலமுருகன் தலைமை தாங்கினார்.

இம்முகாமினை, காசிம் ரெசிடென்சி குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் சரவணன் மற்றும் செயலாளர் சாம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், வாலிபத்தை கூட்டும் மருத்துவ முகாமிற்கான அடிப்படை உடல்நல அலகுகள், முழு உடல் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதில், தலை முதல் கால் வரை பகுதிகளில் நுணுக்கமாக பரிசோதனைகள் மருத்துவர்கள் செய்தனர். மேலும், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் மக்களுக்கு வழங்கப்பட்டது. இதில், பெண்களைப் பரிசோதிப்பதற்கென பெண் மருத்துவர்கள் பிரத்யேகமாக முகாமில் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை வழங்கினர். 40 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்-பெண் இருபாலருக்கும் இரத்த அழுத்தம் பரி சோதிக்கப்பட்டது.

மேல் சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு தகுந்த மருத்துவமனைக்கு உரியமுறையில் பரிந்துரைக்கப்பட்டது. காலை 9 மணி முதல் துவங்கி மதியம் 2 மணிவரை மருத்துவ முகாம் சிறப்புற நிகழ்ந்தது. முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 May 2024 9:48 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!