/* */

மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் விழா

மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் விழா
X

அலங்காநல்லூர் அருகே ,ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு சைவ அன்னதானம் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி பெற்றுத் தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் அனைத்து சமுதாய இளைஞர்கள் சார்பாக ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வருகின்றனர். இந்த காளையை அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த பூசாரி லோகு (வயது35) பராமரித்து வருகிறார். இந்த காளைக்கு இன்றுடன் 7 வயது எட்டியுள்ள நிலையில் முனியாண்டி கோவிலில் சிறப்பு பூஜை செய்து காளைக்கு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கி கொண்டாடினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழர்களும் பங்கேற்று பெற்றுத்தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் இந்த ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறோம். இந்த காளைக்கு காரி (என்ற) கரிகாலன் என பெயர் சூட்டி ஆண்டுதோறும் மே 1ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடி வருகிறோம். இன்றுடன் 7 வயதை எட்டிய நிலையில் எனது வீட்டில் ஒரு பிள்ளையைப் போல் வளர்ந்து வரும் இந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மனிதர்களுக்கு எவ்வாறு பிறந்தநாள் கொண்டாடுகிறோமோ, அதேபோன்று இந்த ஜல்லிக்கட்டு காளைக்கும் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி பிறந்தநாள் கொண்டாடி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 1 May 2024 9:35 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!