/* */

தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று ரவுடிகள் கைது

ஆந்திர எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்ற ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று ரவுடிகள் கைது
X

தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட  மூன்று ரவுடிகள்.

ஆந்திர பிரதேசம் , சித்தூர் மாவட்டம் தவனம்பள்ளி தாலுக்காவை சேர்ந்த திலீப் குமார் என்பவர் சோழிங்கநல்லூரில் டெக் மகேந்திரா என்ற நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 27/4/24 அன்று மாலை 6:00 மணிக்கு ஆந்திராவிலிருந்து வேலை செய்யும் இடத்திற்கு செல்லும் வழியில் இரவு 9 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலை சின்னையசத்திரம் அருகே சிறுநீர் கழிப்பதற்காக சாலையின் சர்வீஸ் சாலையில் வாகனத்துடன் நின்றுள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி , தீலிப்குமாரின் ஆர் ஒன் பைவ் யமஹா வாகனம் , லேப்டாப் இரண்டு அடங்கிய பை மற்றும் செல்போன் ஆகியவற்றை மிரட்டி புடுங்கி விட்டு ஓடவிட்டு விட்டனர்.

இதுகுறித்து புகார்தாரர் காஞ்சி தாலுக்கா காவல் நிலையம் வந்து புகார் கொடுத்த பின் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் பார்வையிட்டனர்.

சிசிடிவி காட்சிகள் பதிவுகளின் அடிப்படையில் பார்த்த போது இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் ஏற்கனவே கொலை வழக்கு உள்ள இரண்டு ரவுடிகள் மற்றும் அவனுடைய கூட்டாளி ஆகிய மூன்று நபர்கள் என்பது தெரிய வந்தது.

அவ்வகையில் காஞ்சிபுரம் கோனேரிகுப்பம் பகுதியை சேர்ந்த ரங்கா , சதீஷ்குமார் , அரவிந்த் ஆகிய மூவரையும் கைது செய்து வழக்குப் பொருட்களை கைப்பற்றி விசாரித்த போது எதிரிகள் தப்பியோட முயற்சி செய்த நிலையில் ரங்கா மற்றும் சதீஷ்குமாருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இரு கைகளும் உடைந்த நிலையில் அவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த மூன்று நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

Updated On: 2 May 2024 6:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்