/* */

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட இல்லை..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6655 மாணவர்களும், 7164 மாணவர்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 819 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

HIGHLIGHTS

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட இல்லை..!
X

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 10,+1 மற்றும் +2 வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அரசு பொது தேர்வு கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரை நடைபெறும் தேர்வு அட்டவணை வெளியிட்டு அதன் படி தேர்வுகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்து மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கி நடைபெற்று முடிந்தது.

இதனைத் தொடர்ந்து மாணவர்களின் மதிப்பெண்கள் அனைத்தும் அவர்களது இணையதளத்தில் ஏற்றப்பட்டு அரசு பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் மூலம் சரிபார்க்கப்பட்ட பின் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவித்தது.

அதன்படி இன்று காலை 9:30 மணியளவில் பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டனர். அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 87.55 சதவீதம் மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதில் 7164 மாணவிகளும் 6655 மாணவர்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 819 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

இந்த நிலையில் 435 மாணவ மாணவிகள் தங்கள் பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மார்க் எடுத்து உள்ளனர். தமிழில் ஒருவர் கூட நூற்றுக்கு நூறு சதவீதம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலத்தில் ஒரு மாணவரும், கணிதத்தில் 318 மாணவர்களும், அறிவியலில் 65 மாணவர்களும், சோசியல் சயின்ஸில் 51 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பிளஸ் டூ பொதுத் தேர்வில் குறைந்த ஒற்றை எண்ணிக்கையில் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற நிலையில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழில் ஒருவர் கூட நூற்றுக்கு நூறு வாங்கவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 10 May 2024 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு