/* */

கட்டவாக்கம் நெல் சேமிப்பு கிடங்கில் காஞ்சிபுரம் ஆட்சியர் திடீர் ஆய்வு

காஞ்சிபுரம் அடுத்த கட்டவாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் சேமிப்பு கிடங்கிளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கட்டவாக்கம் நெல் சேமிப்பு கிடங்கில் காஞ்சிபுரம் ஆட்சியர் திடீர் ஆய்வு
X

கட்டவாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் நெல் கிடங்கினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், கட்டவாக்கம் ஊராட்சியில் திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திடீர் ஆய்வு மேற்கொண்டு முறையாக அரசு விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், கட்டவாக்கம் ஊராட்சியில் திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தை இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தையும் , 131 அட்டிகள் திறந்தவெளியில் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்ட நிலையில் அதனை பிரித்து ஆய்வு செய்து பல்வேறு அறிவுரை வழங்கினார்.

மேலும் மழை பெய்தால் நெல் மூட்டைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தார்ப்பாய்கள் கொண்டு முழுமையாக மூடி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து திறந்தவெளி நெல் சேமிப்பு மைய அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்திற்கு அருகில் ரூ.14,43,00,000/- மதிப்பீட்டில் 3000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 5 சேமிப்பு கிடங்குகள் கட்டப்படுவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு நிலையங்களிலும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் என அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருள் வனிதா, உதவி மேலாளர் ஜெயவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது அங்கங்கே பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை திடீர் என பெய்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது சேதாரத்தை தவிர்க்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது

Updated On: 7 May 2024 10:13 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  2. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  5. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  6. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  8. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  9. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  10. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!