/* */

நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

நொய்யல் ஆற்றங்கரை ஓரமாகவே கிணறு வெட்டி போர்வேல் போட்டுள்ளார்கள். அதற்கான அனுமதியை விதிமுறைகளுக்கு முரணாக பெற்றுள்ளனர்.

HIGHLIGHTS

நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
X

செய்தியாளர்கள் சந்திப்பில் விவசாயிகள்.

கோவை வெள்ளியங்கிரி மலையில் இருந்து வரும் நீரை நானா நானி என்ற முதியோர்கள் வசிக்கும் குடியிருப்பின் பயன்பாட்டிற்காக விதிமீறல் செய்து முறைகேடாக எடுத்து செல்வதாகவும், இது குறித்து குடியிருப்பு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள கடிதத்தின் உண்மை நிலை அறிக்கையை மாவட்ட ஆட்சியர் தர வேண்டி ஆட்சியரிடம் புதுக்காட்டு வாய்க்கால் நீர் பாசன விவசாயிகள் நல சங்கத்தினர் மனு அளித்தனர்.

இது குறித்து பேசிய புதுக்காட்டு வாய்க்கால் நீர் பாசன விவசாயிகள் நல சங்க விவசாயிகள், 2019ம் ஆண்டு நானா நானி என்ற கட்டுமான நிறுவனத்தின் விவசாய நிலத்துக்கு நீர் கொண்டு வர வெள்ளியங்கிரி அடிவாரத்தில் கிணறு வெட்டி நீர் கொண்டு சொல்ல அவர்கள் அனுமதி வாங்கி இருந்ததாகவும், அப்போதே அந்த அனுமதி தவறு என கூறி உயர்நீதிமன்றத்தில் தாங்கள் வழக்கு தொடர்ந்ததாக கூறினர்.

அந்த வழக்கு தங்களுக்கு சாதகமாக வந்து, அவர்கள் போட்டுள்ள பைப் லைன்களை எடுக்க நீதிமன்றம் கூறியதாகவும் பின்னர் குடியிருப்பின் உரிமையாளர் போலி கடிதம் ஒன்றை தாசில்தாரிடம் அளித்ததாக நீதிமன்றத்தில் அளித்துள்ளதாகவும் இந்நிலையில் அந்த கடிதத்தின் உண்மை அறிக்கையை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக கூறினர்.

அவர்களின் இந்த செயலால் அப்பகுதி விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்படுவோம் எனவும் மக்களுக்கும் குடிநீர் இன்றி தவிப்பார்கள் எனவும் கூறினர். நொய்யல் ஆற்றங்கரை ஓரமாகவே கிணறு வெட்டி போர்வேல் போட்டுள்ளார்கள் எனவும் அதற்கான அனுமதியெல்லாம் விதிமுறைகளுக்கு முரணாக பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினர். அப்பகுதியில் பைப் லைன் போடுவதற்கு விவசாயிகளுக்கே அனுமதி வழங்கப்படுவதில்லை என்ற நிலையில் இவர் விவசாயி என்று கூறி அனுமதி பெற்று பைப் லைன் போட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளதாகவும் அந்த உத்தரவின் மீது அவர் அப்பீல் செய்துள்ளார் எனவும் இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உண்மை அறிக்கை தருவதாக கூறியுள்ளார் என கூறினர்.

குடியிருப்பிற்காக நொய்யல் ஆற்றை கடந்து 8 இஞ்ச் பைப் போட்டுள்ளார்கள் எனவும் விவசாயிகளுக்கே 2 இஞ்ச் பைப் தான் அனுமதி அளிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் அளித்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் மாவட்ட ஆட்சியர் அவ்வாறு எந்த கடிதமும் வரவில்லை என்கிறார் என தெரிவித்தனர். அவரது குடியிருப்புகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக ஆற்றை ஒட்டி கிணறு வெட்டி நீர் எடுப்பதாகவும் இதன் மூலம் சுமார் 4000 ஏக்கர் பாசன விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனவும் மேலும் அங்கு நிலத்தடி நீரும் போய்விடும் எனவும் கூறினர்.

Updated On: 25 April 2024 9:17 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  2. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  3. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  5. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  6. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  7. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...
  10. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...