/* */

ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ராயல்டி பற்றிய பஞ்சாயத்து பரவலாக விவாதமாகியுள்ளது.

HIGHLIGHTS

ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
X

இயக்குனர் மணிரத்தினம் (கோப்பு படம்)

இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கான ராயல்டி பற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அது சம்மந்தமாக பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. குறிப்பாக இளையராஜா பணத்தாசையால் இப்படி நடந்து கொள்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ராயல்டி சம்மந்தமாக குழப்பமான கருத்துகள் நிலவுவதால் இதுபற்றிய தெளிவான புரிதல் பலருக்கும் இல்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் ஒரே ஒரு பாடலைப் பயன்படுத்தி ஹாலிவுட்டில் ஒரு கோடி ரூபாயை ராயல்டியாக இயக்குனர் மணிரத்னம் சம்பாதித்துள்ளார் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது. மணிரத்னம் தயாரித்து இயக்கிய தில்சே படத்தில் சையா சையா என்ற பாடல் இடம் பெற்றது.

ஹாலிவுட் இயக்குனர் ஸ்பைக் லீ இயக்கிய இன்சைட் மேன் என்ற படத்தின் ஆரம்பத்தில் இந்த பாடலை பயன்படுத்த அனுமதிக் கேட்டுள்ளனர். அப்போது இந்த பாடல் வேண்டுமென்றால் ஒரு கோடி ரூபாய் ராயல்டியாக கொடுங்கள். அப்போதுதான் தருவோம் எனக் கறாராகக் கூறியுள்ளார் மணிரத்னம். அவர்களும் அந்த பாடலுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்துவிட்டு அதைப் பயன்படுத்திக் கொண்டார்களாம்.

மணிரத்னம் பிடிவாதமாக ஒரு கோடி ரூபாய் கேட்க ஒரு பின்னணி காரணம் இருக்கிறது. அலைபாயுதே படத்தின் போது ஆரம்பக் காட்சியில் ‘என்றென்றும் புன்னகை’ பாடலுக்கு பதிலாக Backstreet Boys -ன் ஒரு பாடலை ஒலிக்க விடலாம் என்பதுதான் படக்குழுவின் திட்டமாக இருந்ததாம். அப்போது சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் அதற்கான உரிமையைக் கேட்ட போது அவர்கள் ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் எனக் கேட்டார்களாம்.

அவ்வளவு பெரிய தொகை தர முடியாது என்பதால் ரஹ்மானை வைத்து புதிதாக என்றென்றும் புன்னகை பாடலை உருவாக்கி பயன்படுத்தினார்களாம். சம்மந்தப்பட்ட அதே நிறுவனம்தான் சையா சையா பாடலைக் கேட்டபோது மணிரத்னம் அதே ஒரு கோடியை கேட்டு பெற்றாராம்.

Updated On: 7 May 2024 5:28 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    மண் சரிவால் நீலகிரி மலை இரயில் சேவை இரத்து: சீரமைக்கும் பணிகளில்...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமான பிரளயநாத சிவன் ஆலயத்தில், நரசிம்மர்...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. செங்கம்
    செங்கத்தில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டி
  5. கல்வி
    பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு...!
  6. போளூர்
    சேத்துப்பட்டு அருகே வனப்பகுதியில் செம்மரங்கள் கடத்தல்
  7. தேனி
    யார் இந்த பாண்டியன் ஐஏஎஸ்? ஆர்வம் காட்டும் தமிழக மக்கள்
  8. ஈரோடு
    பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கொடிவேரி தடுப்பணை இன்று மூடல்
  9. தமிழ்நாடு
    அறிவாலயத்தில் நடக்கும் பரபரப்பு: யாருக்கு செக், யாருக்கு ஜாக்பாட்
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்