/* */

திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம், கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம்
X

கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் டிஜிட்டல் சேவைகள் துறை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமாா் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சி காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கும் மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

மேலும் ஊரக மற்றும் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்படுகிறது என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும்,

குடிநீர் சம்பந்தமாக வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும்,

தேர்தலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குடிநீர் சம்பந்தமான வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடித்து அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், குடிநீர் ஆதாரங்கள் குடிநீர் வழங்குவதில் உள்ள சிரமங்கள் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அனைத்து அலுவலகங்களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் மற்றும் ரேஷன் கடைகளில் குடிநீர் மற்றும் ஓ ஆர் எஸ் கரைசல் வைக்க ஏற்பாடு செய்ய அறிவுறுத்தினார்.

மேலும், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் குறைவாக உள்ளது குறித்தும், அடுத்த ஆண்டுக்கான பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது

பள்ளிகளில் வகுப்பில் கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அவர்களின் பெற்றோர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி அவர்கள் கல்வி கற்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் கல்வித்துறை அதிகாரிகள் இதை கண்காணித்து தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், கூடுதல் ஆட்சியா் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, செய்யாறு சாா்- ஆட்சியா் பல்லவி வா்மா, நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,தமிழ்நாடு குடிநீர் வாரிய அலுவலர்கள் ,மின்சார துறை அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 May 2024 2:33 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  3. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  4. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  5. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  6. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  7. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  8. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!